இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
மதுரையில் சிறப்பு சட்டக் கல்லூரி - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!
மதுரையில் சிறப்பு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். 300 மாணவர் சேர்க்கையுடன் இந்த கல்லூரி அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.90 கோடியில் 5 புதிய தொழில் பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 2026-27ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ளார். தவெக ஆட்சி அமைந்து தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், சாமானிய மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய வந்த அமைச்சர் மரிய வில்சன், பட்ஜெட் அறிக்கையுடன் ஜெப மாலையையும் கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், உயர்கல்வித்துறைக்கு ரூ.8,383 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 25 ஆயிரம் வாகன மெக்கானிக்குகளை உருவாக்க ரூ.3 கோடியில் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் பேட்டரி பராமரிப்பு மற்றும் மின்சார வாகன பராமரிப்பு பயிற்சியும் வழங்கப்படும்.
ரூ.10 கோடியில் தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு கழகம் அமைக்கப்படும். ஒரு லட்சம் படுக்கை வசதிகளுடன் கொண்ட மாணவர் விடுதிகள் அமைக்கப்படும். அதேபோல் ரூ,90 கோடியில் 5 புதிய தொழில் பயிற்சி மையம் அமைக்கப்படும். அதேபோல் மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
300 மாணவர் சேர்க்கையுடன் மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஏற்கனவே மாவட்ட நீதிமன்றம் முன்பாகவே ஒரு சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு அண்மையில் தான் புதிய கட்டங்கள் கட்டி முடிக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன. தற்போது புதிய சட்டக் கல்லூரி அமைக்கப்பட இருப்பதாக வெளியாகும் அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது