இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
அன்புமணியுடன் பிரச்னை தீர்ந்தது - வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணிக்கு எதிரான வழக்கை ராமதா வாபஸ் பெற்றுள்ளதால் தந்தை மகன் இடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரிய வழக்கை ராமதாஸ் வாபஸ் பெற்றதால், வழக்கை முடித்து வைத்து உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாமக இரு அணியாக செயல்பட்டு வந்தது. இதனால் பாமக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த தடை விதிக்ககோரி ராமதாஸ் உரிமையிடல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில், தங்களுக்குள்ளான பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொண்டதால் மனுவை திரும்ப பெறுவதாக ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அன்புமணி மீது அடுக்கடுக்கனா குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ராமதாஸ், பாமக கொடி, சின்னம், பெயர் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
சட்டமன்ற தேர்தலிலும் மோதல் நீடித்த நிலையில், கடந்த மாதம் தனது தந்தை ராமதாசின் 61-வது திருமண நாளில் தைலாபுரம் வீட்டிற்கு அன்புமணி தனது குடும்பத்தினருடன் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தந்தை - மகன் இடையே ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. மேலும் கூடிய விரைவில் தந்தை மகன் இருவரும் ஒன்றிணைவார்கள் எனவும் பேசப்பட்டது. இந்த நிலையில் தான், அன்புமணிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை ராமதாஸ் வாபஸ் பெற்றுள்ளார்.
தங்களுக்குள்ளான பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொண்டதால் மனுவை திரும்பப் பெறுவதாக ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மனுவை ராமதாஸ் திரும்ப பெற்ற நிலையில் வழக்கை முடித்து வைத்து உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தந்தை - மகன் இடையே கட்சிக்குள் நிலவி வந்த யுத்தம் முடிவுக்கு வந்ததுள்ளது. இதனால் பாமகவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.