யுபிஐ ஆப் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு விரைவில் புதிய கட்டணம்?.
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் சங்கர் தவெகவில் இணைந்தார்!
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் வழக்கறிஞரான இவர், 2021 மற்றும் 2026 சட்டசபை தேர்தல்களில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டார்.
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளராகச் செயல்பட்டு வந்தவர் எஸ்.சங்கர். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் வழக்கறிஞரான இவர், 2016 மற்றும் 2026 சட்டசபை தேர்தல்களில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் வழக்கறிஞர் எஸ். சங்கர். இந்நிலையில், அவர் தற்போது, நாதகவில் இருந்து விலகி அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.
முன்னதாக நேற்று, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, வழக்கறிஞர் சங்கர் எழுதிய கடிதத்தில், "நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பிற பொறுப்புகளிலிருந்து நான் முழுமையாக விலகிக் கொள்கிறேன். கட்சிப் பொறுப்பும், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் வழங்கிய உங்களுக்கு என் பெரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தம்பி, தங்கைகளுக்கு என்னுடைய வாழ்த்தும், பேரன்பும், நன்றியும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.