காற்றில் கரைந்த கானக்குயில் - மறைந்தார் ஜானகி அம்மா!

famous-singer-s-janaki-death
காற்றில் கரைந்த கானக்குயில் - மறைந்தார் ஜானகி அம்மா!

இந்தியத் திரையிசையின் ஒப்பற்ற குரலாகவும், பல தலைமுறைகளின் மனங்களை தனது இனிய குரலால் வசீகரித்த இசைக்குயில் எஸ். ஜானகி அவர்கள் மறைந்த செய்தி திரையுலகிற்கும், இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். அவர் 88 வயதில் காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். அவரது குரல் தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் இதயங்களில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

"குரல் மறையலாம்... ஆனால் அந்தக் குரலால் உயிர் பெற்ற பாடல்கள் என்றும் மறையாது."

இசைக்குயில் எஸ். ஜானகி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.