தவெகவில் இணைந்த இபிஎஸ் உறவினர்!

eps-relation-joined-with-tvk
தவெகவில் இணைந்த இபிஎஸ் உறவினர்!

அதிமுகவில் மூன்று முறை வலங்கைமான் தொகுதி எம்எல்ஏவாகவும், ஒரு முறை அமைச்சராகவும் பதவி வகித்த மூத்த தலைவர் கோமதி சீனிவாசன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். இதே போல இபிஎஸ் உறவினர் மேனகாவும் தவெகவில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் திமுக- அதிமுக என மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றி அசத்தியுள்ளது. அந்த வகையில், இரண்டாவது இடத்தில் திமுகவும், 3வது இடத்தை அதிமுகவும் பிடித்தது. இதனால் அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்ட நிலையில், மாஜி அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மாற்று கட்சியினரை தவெகவில் இணைக்கும் விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை தவெக தலைமை அலுவலகமாக பனையூரில் ஏராளமான மாற்றுக்கட்சியினர் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில், சுமார் 12 மணியளவில் மாற்றுக்கட்சியினர் தவெக அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். முட்டி மோதி மாற்று கட்சியினர் உள்ளே சென்றனர். இதனையடுத்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் பலரும் தவெகவில் இணைந்தனர். அந்த வகையில் அதிமுகவில் மூன்று முறை வலங்கைமான் தொகுதி எம்எல்ஏவாகவும், ஒரு முறை அமைச்சராகவும் பதவி வகித்த மூத்த தலைவர் கோமதி சீனிவாசன், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.

இதே போல அதிமுக கலைப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.வி. உதயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், திருவையாறு தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், குன்னூர் தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, மதுரை அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணைச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன், திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான், நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா தவெகவில் இணைத்தார். இது மட்டுமில்லாமல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் சகோதரி மகளும், தொழிலதிபருமான மேனகா தவெகவில் இணைந்தார்.