ஐடிஐ மாணவர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் திட்டம்!

iti-students-scholarship-tamilnadu-news
ஐடிஐ மாணவர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் திட்டம்!

2026-ஆம் ஆண்டுக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) சேர்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும், சேரும் மாணவர்களுக்கு பல்வேறு நலன்கள் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் **[www.skilltraining.tn.gov.in](http://www.skilltraining.tn.gov.in)** என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 16.05.2026 முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 03.06.2026 ஆகும். மாணவர்களுக்கு உதவிட அரசு ITIகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களில் Help Desk வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, ITI-யில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனுடன், 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு “தமிழ்ப்புதல்வன் / புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.1000 வழங்கப்படுகிறது. இதனால், மாதந்தோறும் ரூ.1750 வரை பெறும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கிறது.

மேலும், மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டி, வரைபட கருவிகள், காலணிகள் ஆகியவை வழங்கப்படும். இலவச பேருந்து பயண அட்டை, தங்கும் விடுதி வசதி மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன. பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் NCVT சான்றிதழும் வழங்கப்படும்.

Fitter, Electrician, Welder, Machinist, Wireman, CNC Technician, Robotics போன்ற பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் வாய்ப்பு உள்ளது. 8ஆம் வகுப்பு அல்லது SSLC தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை வயது வரம்பு உள்ள நிலையில், பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

எனவே, தொழில் திறனை மேம்படுத்த விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு ITI-களில் சேர்ந்து தங்களின் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளலாம். See less