ஈரானியக் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா - ஈரான் ஆவேச எச்சரிக்கை!
ஈரானியச் சரக்குக் கப்பலை அமெரிக்கக் கடற்படை தாக்கியதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.
ஓமான் வளைகுடாவில் நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதலுக்கும் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கும் விரைவில் பதிலடி தரப்படும் என்று ஈரான் மத்தியத் தளபத்தியத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
ISNA செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இம்மாதம் 8 ஆம் தேதி நடப்புக்கு வந்த சண்டைநிறுத்தத்தை அமெரிக்கா மீறியதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியது.
அமெரிக்கா ஈரானியத் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது. அதை மீறி கடந்து செல்ல முயன்ற ஈரானியக் கப்பலை அமெரிக்கக் கடற்படை நேற்று கைப்பற்றியதாக அதிபர் டோனால்ட் டிரம்ப் தமது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தார்.
கப்பல் தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.