அமெரிக்க நெடுஞ்சாலையில் தேனீக்களின் படையெடுப்பு!
அமெரிக்க நெடுஞ்சாலையில் ஒரு மில்லியன் தேனீக்களின் படையெடுப்பு! போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்த ஒரு லொரி திடீரென்று கவிழ்ந்தது.
மறுகணமே அப்பகுதியில் தேனீக்களின் ரீங்காரத்தால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
அந்த லாரியிலிருந்த சுமார் 1 மில்லியன் தேனீக்கள் கூட்டமாகப் படையெடுத்துச் சாலையை நிறைத்தன.
சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது. விபத்து ஏற்பட்ட இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், "தேனீ வளர்ப்பவர்கள் அணியும் சிறப்புப் பாதுகாப்பு உடை அணிந்திருப்போர் வெளியே வரலாம், வாகனக் கண்ணாடிகளைக் கூடத் திறக்க வேண்டாம்" என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
நல்லவேளை விபத்தில் யாருக்கும் காயமில்லை. அப்பகுதியில் தேனீக்களின் 'படையெடுப்பு' சில மணிநேரத்துக்கு நீடித்தது.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அனைத்துத் தேனீக்களும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன. மூடப்பட்ட சாலைப்பகுதியும் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது.
விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதற்கு உள்ளூர் போக்குவரத்துத் துறை மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.