ஹோர்முஸ் நீரிணையை மூடுவோம்: ஈரான் மீண்டும் எச்சரிக்கை!

hormuz-iran-war-us-war
ஹோர்முஸ் நீரிணையை மூடுவோம்: ஈரான் மீண்டும் எச்சரிக்கை!

நாட்டின் துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிட்டால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது.

ஈரானின் நாடாளுமன்ற நாயகர் முகமது பாகர் கலிபாஃப் (Mohammad Bagher GhaliBaf) X தளத்தில் அதனைப் பதிவிட்டார்.

ஈரானின் அனுமதியைப் பொறுத்து கப்பல்கள் நீரிணை வழி செல்ல முடியும் என்றார் அவர்.
முன்னதாக, வர்த்தகக் கப்பல்களுக்கு நீரிணை முற்றிலும் திறந்திருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சி குறிப்பிட்டுள்ளார்.

அறிவிப்பை வரவேற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமைதி உடன்பாடு எட்டப்படும்வரை ஈரானின் கடல்வழி வர்த்தகம் தொடர்ந்து முடக்கப்படும் என்று சொன்னார்.

இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் அனைத்து வர்த்தகப் பயணங்களும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்படையுடன் ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்று ஈரானிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

கப்பல்கள் குறிப்பிட்ட சில பாதைகளை மட்டுமே பயன்படுத்தலாம் என்றும் ராணுவக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.