ஹோர்முஸ் நீரிணை - கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச்சூடு!

strait-of-hormuz-iran-war
ஹோர்முஸ் நீரிணை - கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச்சூடு!

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இரண்டு வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஈரானியப் புரட்சிப் படையின் இரண்டு போர்ப் படகுகள் ஓர் எண்ணெய்க் கப்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகப் பிரிட்டிஷ் ராணுவமும் கூறியிருக்கிறது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிவிட்டதாக ஈரான் அறிவித்த சில மணி நேரத்தில் அந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

ஒமானுக்கு வடகிழக்கே 20 கடல் மைல் தூரத்தில் சம்பவம் நிகழ்ந்தது.
கப்பலும் அதன் மாலுமிகளும் பாதுகாப்பாய் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

அமெரிக்கக் கடற்படை ஹோர்முஸ் நீரிணையை முடக்குவது முறையல்ல என்று ஈரானிய ராணுவம் கூறியது. அமெரிக்கா அதன் வாக்குறுதியை மீறுவதாகவும் அது குற்றஞ்சாட்டியது.
நீரிணை பழையபடி சுதந்திரமாக இயங்க அமெரிக்கா ஒத்துழைக்கும் வரை நீரிணையில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என்று அது சொன்னது.