தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
'தமிழ் வாழ்க' என்று அரசு கட்டிடங்களில் எழுதி வைத்தால் மட்டும் தமிழ்மொழி வாழாது, வளராது; அதற்கு அரசு சட்டங்களில் உள்ளதை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டில் வாழும் மக்களின் இதயச் சுவரில் எழுத வேண்டும் என்பதை திமுக அரசு இனியாவது உணர்ந்து, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்றார் செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி.