மக்களே இல்லாத சவுதியின் மாய நகரம் பாதியிலேயே நின்றது?
சவுதி அரேபியாவின் கனவுத் திட்டமான 'தி லைன்' (The Line) ரத்து செய்யப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் உலகளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நவீன நகர்ப்புற வளர்ச்சியின் உச்சகட்டமாகக் இத்திட்டம் கருதப்படுகின்றது.
170 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நேர்க்கோட்டு நகரம், கார்கள், சாலைகள் மற்றும் கார்பன் வெளியேற்றம் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் இந்த நகரம் நிலைத்தன்மை கொண்ட நகர்ப்புற வாழ்க்கைக்கு ஒரு முன்னுதாரணமாகும்.
சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை எண்ணெய் சார்ந்திருப்பதிலிருந்து மாற்றி,
தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறையில் உலகளாவிய மையமாக மாற்றுவதே இந்த 'விஷன் 2030' திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் பட்ஜெட் மாற்றங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாக இது கைவிடப்படுவதாகப் பல வதந்திகள் பரவின.
இருப்பினும், இந்தத் திட்டம் முற்றிலும் ரத்து செய்யப்படவில்லை என்றும், அதன் பிரம்மாண்டமான அளவில் சில மாற்றங்கள் மற்றும் கட்டம் கட்டமாக (Phased development) செயல்படுத்துவதற்கான திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவீன வரலாற்றின் மிகவும் சவாலான மற்றும் துணிச்சலான ஒரு பொறியியல் முயற்சியாக இத்திட்டம் இன்றும் உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது.