பதற்றம் உச்சகட்டம் ஈரானியப் பாலம் தகர்க்கப்பட்டது!
டிரம்ப்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அடுத்தகட்ட நகர்வு.
ஈரானில் மிகப்பெரிய பாலத்தை அமெரிக்கா தகர்த்திருக்கிறது. எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 95 பேர் காயமுற்றனர் என்று ஈரானிய அரசாங்க ஊடகம் சொன்னது.
பாலம் சரிவதைக் காட்டும் காணொளியை அதிபர் டொனல்ட் டிரம்ப் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டார்.
ஈரான் உடன்பாட்டுக்கு இணங்காவிட்டால் இதுபோல் இன்னும் நடக்கும் என்று அவர் சொன்னார்.
உடைக்கப்பட்டது புதிதாகத் திறக்கப்பட்ட பாலம். தலைநகர் தெஹ்ரானை வடக்கே இருக்கும் மாநிலங்களுடன் இணைக்கும் பாலம் அது.
மத்திய கிழக்கில் ஆக உயரமான பாலமாக அது அங்கீகரிக்கப்பட்டது.
பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டுமானங்களைத் தாக்கி ஈரானைச் சரணடையச் செய்துவிட முடியாது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சி கூறினார்.