உலக அழிவிலிருந்து தப்பிக்க ரகசியத் திட்டம்!
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களான எலான் மஸ்க் மற்றும் பீட்டர் தியேல் போன்றவர்கள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளாவிய பேரழிவுகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளத் தீவுப் பகுதிகள் மற்றும் நிலத்தடி பதுங்கு குழிகளில் ரகசியமாகப் பெரும் முதலீடுகளைச் செய்து வருகின்றனர்.
அணு ஆயுதப் போர், காலநிலை மாற்றம் அல்லது புதிய வைரஸ் பாதிப்புகள் போன்ற உலக முடிவு காலத்தை எதிர்கொள்ள இப்போதே அவர்கள் தயாராகி வருகின்றனர்.
குறிப்பாக மார்க் ஹவாய் தீவில் சுமார் 100 மில்லியன் டாலர் செலவில் ஒரு பிரம்மாண்டமான பண்ணை வீட்டைக் கட்டி வருகிறார்.
இதில் சுமார் 5,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன நிலத்தடி பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சொந்தமாக மின்சாரம் மற்றும் உணவு உற்பத்தி வசதிகள் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்து நாடு இத்தகைய பில்லியனர்களின் விருப்பமான இடமாக மாறியுள்ளது. உலகின் மற்ற நாடுகளிலிருந்து தனித்து இருப்பதாலும், வளமான இயற்கை வளங்களைக் கொண்டிருப்பதாலும், பல கோடீஸ்வரர்கள் அங்கு நிலங்களை வாங்கி நிலத்தடி குடியிருப்புகளை அமைத்துள்ளனர். ஒருவேளை உலகளாவிய சமூகக் கட்டமைப்பு சீர்குலைந்தால், அங்கிருந்து தப்பித்துச் செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ரகசியப் பதுங்கு குழிகள் சாதாரணமானவை அல்ல; இவை பல ஆண்டுகள் தங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் நவீன ஹைட்ரோபோனிக் விவசாய முறைகள் மூலம் காய்கறி வளர்க்கும் வசதிகள் என ஒரு சொகுசு உலகமே நிலத்திற்கு அடியில் உருவாக்கப்பட்டு வருகிறது.
'Survival of the Richest' போன்ற புத்தகங்கள் மற்றும் ஆய்வுகள், இந்தப் பில்லியனர்கள் பணம் செல்லாத ஒரு காலத்தில் தங்களின் பாதுகாப்புப் படையினரை எவ்வாறு தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறுகின்றன. இது வெறும் பாதுகாப்புத் திட்டம் மட்டுமல்ல, ஒருவிதமான "தப்பிக்கும் மனப்பான்மை என்று சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.
உலகைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தங்களின் செல்வத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அழிவிலிருந்து தாங்கள் மட்டும் தப்பிக்க முயல்வது ஒரு சமூகப் பொறுப்பற்ற செயல் எனப் பலரும் கருதுகின்றனர். இருப்பினும், இந்த உயர்தர டூம்ஸ்டே ப்ரீப்பிங் சந்தை தற்போது கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய தொழிலாக வளர்ந்து வருகிறது.