தென்கொரியாவிற்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அதிரடி அழைப்பு!
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாக்க சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவை விட இந்த நாடுகளின் பொருளாதாரமே அந்த நீர்வழியை அதிகம் நம்பியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "அமெரிக்கா தனது தேவையில் 1% க்கும் குறைவான எண்ணெயையே இந்த ஜலசந்தி வழியாகப் பெறுகிறது. ஆனால் ஜப்பான் 95%, சீனா 90% மற்றும் தென்கொரியா 35% எண்ணெயை அங்கிருந்தே பெறுகின்றன. எனவே அவர்கள் ஏன் எங்களுக்கு உதவ முன்வரக்கூடாது?" எனக் கேள்வி எழுப்பினார்.
கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்கா இந்த நாடுகளுக்குப் பாதுகாப்பு வழங்கி வருவதை நினைவு கூர்ந்த அவர், சில நாடுகளில் (ஜப்பான் மற்றும் தென்கொரியாவை மறைமுகமாகக் குறிப்பிட்டு) 45,000 அமெரிக்க வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு விவகாரங்களில் இந்த நாடுகள் காட்டும் 'குறைந்த ஆர்வம்' தனக்கு வருத்தமளிப்பதாகவும், நாடுகளின் ஈடுபாடு (Enthusiasm) தனக்கு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, உலகிலேயே வலிமையான ராணுவம் எங்களிடம் உள்ளது. நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதை அறியவே நான் இவ்வாறு கூறுகிறேன்," எனத் தனது பாணியில் எச்சரிக்கை விடுத்தார்.
தற்போது ஈரான் இந்த நீர்வழியை அமெரிக்க ஆதரவு நாடுகளுக்குத் தடையாக மாற்றியுள்ள சூழலில், ட்ரம்பின் இந்த அழுத்தம் ஆசிய நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர்க்கப்பல்களை அனுப்புவது குறித்து வாஷிங்டனுடன் விரிவாக ஆலோசிக்க வேண்டும் என நிதானமாகப் பதிலளித்துள்ளது.
ட்ரம்பின் இந்த சமீபத்திய கருத்து குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை.