“டேய் செத்துருடா உன்னை என்னால இப்படி பாக்க முடியல டா”! - தாயின் கதறல்!
பொறுமையிழந்த நிலையில், என் அம்மா என்னிடம் சொன்ன வார்த்தைகள் தான் இது.
ஒரு தாயே தன் மகனிடம் இப்படிப் பேச வேண்டிய நிலை வந்திருந்தால், அந்த நேரத்தில் என் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ள முடியுமா?
பதிமூன்று வயதில் இந்தியாவின் ஜெர்சி அணிந்து ஸ்னூக்கர் விளையாடி பதக்கங்களை குவித்த காலம் எனக்கு இருந்தது.
நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமையாக இருந்தவன்.
அப்போது என் அம்மாவுக்கு என்னைப் பற்றி சொல்ல நூறு நாவுகள் இருந்தன.
ஆனால் 18 வயதில், ஒரு “ஜோக்” ஆக பயன்படுத்திய ஹெரோயின் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.
எனக்கே தெரியாமல் நான் போதைக்கு அடிமையாகி விட்டேன்.
பொய் சொல்லுதல், வீட்டில் திருடுதல், காதலியை மிரட்டுதல்…
இறுதியில் என்னை பயந்து, வீட்டிலுள்ள அலமாரிகளை பூட்டவும், காரை விற்கவும், நகைகளை மறைக்கவும் என் பெற்றோர் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
அறையை திறக்காமல் கிடந்த எனக்கு, ஜன்னல் வழியாக உணவு கொடுக்க வேண்டிய நிலை என் அம்மாவுக்கு வந்தது.
இறுதியாக, நிர்வாண நிலையில் குளியலறையில் மயங்கி கிடந்த என்னைப் பார்த்து தாங்க முடியாமல்தான் அம்மா அந்த வார்த்தைகளை சொன்னாள்:
டேய் செத்துருடா உன்னை என்னால இப்படி பாக்க முடியல டா
அரை மயக்கத்திலிருந்தாலும், அந்த வார்த்தைகள் என் நெஞ்சில் குத்தியது.
அப்போது தான் ரீஹேப் செல்வதற்கு நான் சம்மதித்தேன்.
அன்று அம்மா என்னை ரீஹேபில் சேர்த்தாள்.
அங்கு நடுங்கியும், வியர்த்தும், வாந்தி எடுத்தும் கிடந்த போது, அம்மாவை நினைத்து எனக்குள் அடங்காத வெறுப்பு இருந்தது.
ஒருமுறை என்னைப் பார்க்க வந்த அம்மா, என் பரிதாபமான நிலையை பார்த்ததும், இனி போதைப் பொருள் பயன்படுத்த மாட்டேன் என்ற என் உறுதியையும் நம்பி, சிகிச்சை முடிவதற்கு முன்பே என்னை வீட்டுக்கு கொண்டு வந்தாள்.
ஆனால் வெளியே வந்த அதே நாளே நான் மீண்டும் போதைப் பொருள் பயன்படுத்தினேன்.
உடல் கொஞ்சம் சரியானாலும், என் மனம் மாறவில்லை.
ஆனால் என் அம்மா தோற்கத் தயாராக இல்லை.
மீண்டும் ரீஹேப்…
அங்கே இருந்து
“என்னை எப்படியாவது இங்கிருந்து கொண்டு போங்க அம்மா…”
என்று தொலைபேசியில் அழுது கெஞ்சின போதும், அம்மா கல்லைப் போல உறுதியாக நின்றாள்.
ஏனெனில், அப்போது மனம் தளர்ந்தால், நான் இறந்து போய்விடுவேன் என்று அவளுக்கு உறுதியாக தெரிந்தது.
இறுதியில் சிகிச்சை முடிந்து, இன்று நான் ஆரோக்கியமாக திரும்பி வந்திருக்கிறேன்.
அன்று என்னுடன் சேர்ந்து போதைப் பொருள் பயன்படுத்திய பல நண்பர்கள் இன்று உயிரோடு இல்லை.
அப்போது தான் நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தேன்.
நான் வலிமையானவன் என்பதால் அல்ல இன்று உயிருடன் இருப்பது…
என்னை விட வலிமையான என் அம்மா இருந்ததால் தான்.
வாழ்க்கை கையில் இருந்து வழுவி விட்டதாக நினைப்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல்.
திரும்பி வர வேண்டும் என்ற உறுதியும், உங்களை அணைத்துக் கொள்ள ஒரு அன்பான கை அருகில் இருந்தால், எந்த நரகத்திலிருந்தும் வாழ்க்கைக்குள் நடந்து வர முடியும்