ரஜினி காந்த் பிறந்தநாள் - 12.12.2025
இந்நாளில் உண்மையில் மனிதம் போற்றும் புனிதர் அவருக்கு ஒரு
புகழ்மாலை சூட்டவில்லை
என்றால் என் வார்த்தைகள் என்னைத்
திட்டித் தீர்த்திவிடும்..
இதோ படைக்கிறேன்
எழுத்தினிலே
ஊரெலாம் காக்கும் குணநிதிக்கு பிறந்தநாள்
வரும்பகையழிக்கும் வல்லவருக்கு பிறந்தநாள்
என் உயிரின் உயிரானவருக்கு
பிறந்தநாள்
என் உயிரினும் இனியவருக்கு
பிறந்தநாள்...
என் புன்னகைகளின்
புகலிடத்துக்கு பிறந்தநாள்...
என் சந்தோசங்களின்
சந்நிதானத்துக்கு பிறந்தநாள்..
என் சுவாசத்தின் மூச்சுக்காற்றுக்கு பிறந்தநாள்...
என் இதயத்தின் இருப்பிடத்துக்கு
பிறந்தநாள்...
நான் நானாக வாழ வரம் தந்தவருக்கு பிறந்தநாள்
இரண்டு வரி வடித்து உன்னை
வாழ்த்திட என் இதயம்
இடமளிக்கவில்லை தலைவா...
வார்த்தைகள் தேடி தோற்றுப்போய்
விட்டேன் உன் மீதான அன்புக்கு முன்னே,
உன்னை வாழ்த்திட
வரிகள் மறந்த நிலையில்,
உனதான நாளிலே
உனக்காய் இவன் பிரார்த்தனை செய்கின்றேன்
எவரும் தொடாத உயரங்கள் நீ தொட,
எவரையும் அணுகாத சந்தோசங்கள்
உன்னை சேர,
உன் புன்னகை முகம் என்றுமே
மலர்ந்திருக்க,
நீ நாடியதெல்லாம் இறைவன்
அருள்கொண்டு அடைய,
உயிர் பூஜைகள் ஏராளம் செய்தே
உயில் எழுதுவேன் எந்தன் உயிரை உனக்காக
நலமாய் வாழ வாழ்த்தவில்லை வணங்குகின்றேன்
நான் வாழும் வரை
எனக்குள் வாழ்ந்து
கொண்டிருப்பாய் தலைவா
என்றென்றும் உங்கள் வழியில்
உங்கள் வெறியன்
குரு ரஜினி
ஹேப்பி பர்த்டே தலைவா.
எனது பதின்பருவ இறுதிகளில்...
அப்பொழுதுதான் ஆயில் பெயிண்ட்டிங் ஒரளவு கற்றுக் கொண்டு வரும் நேரம்...
அப்பொழுதெல்லாம் , எல்லா வளரும் ஓவியர்கள் போல நடிகர் நடிகைகளாக வரைந்து தள்ளிக்கொண்டு இருப்பேன்...
சிவாஜி, எம்ஜியார் , கமல், ரஜினி, பாக்யராஜ், T. ராஜேந்தர் , ஜெயப்ரதா, சரிதா , சுதா சந்திரன் , குட்டி சிம்பு , பிரபு என பென்சில் ஷேடிங், போஸ்டர் கலர் , ஆயில் பெயிண்ட்டிங் என வரைந்து தள்ளுவேன்...
அதற்காக நிறைய பொங்கல் வாழ்த்து அட்டைகள், 3 ரூபாய்க்கு விற்கும் நடிகர் நடிகை போஸ்டர்கள் , தலைவர்கள் பட சார்ட்டுகள் , சாமி பட காலண்டர்கள் , இயற்கைக்காட்சி ஓவியப் படங்கள்
என வாங்கி அவற்றைக் கொண்டு ஒரு பிக்ச்சர் ஆல்பமும் ரெடி செய்து வைத்திருந்தேன்.
அவற்றைப் பார்த்து நிறைய வரையவும் செய்வேன்.
காலவோட்டத்தில் சில படங்கள் காணாமல் போய்விட்டன.
இதோ நீங்கள் பார்க்கும் இந்த ரஜினி காந்த் படம் மனிதன் பட ஸ்டில் . மிக ஃபேமஸான படம்..வழக்கத்தைவிட இந்தப் படத்தில் மிக அழகாக, கலராக, ஸ்டைலாக இருப்பார்...இது ஒரு பொங்கல் வாழ்த்து அட்டை. விலை 50 பைசா...அந்த கார்டில் ஃபோட்டோவின் மேல் கட்டங்கள் போட்டு என்லார்ஜ் முறையில் ஓவியத்தை வரைந்தேன் .ஆயில் பெயிண்ட்டிங்... ஆயில் ஸ்கெட்ச்சிங் பேப்பர் என்ற ஒரு வகை சார்ட்.. Camlin brand... ஒரு சைட் ப்ரைமர் கோட்டிங் போல இருக்கும். லென்சீட் ஆயில் கொண்டு வரைந்தது...சரியான டெக்னிக் தெரியாததால் லென்சீட் ஆயிலை அதிகமாக சேர்த்து வரைந்திருப்பேன்... உலர்வதற்கு வாரக்கணக்கில் ஆகும்...தூசு படிந்து வீணாகவும் செய்யும். அப்படி வரைந்த படங்களுள் ஒன்றுதான் இது...
நான்கு வருடங்களுக்கு முன்பு எங்கள் பள்ளி மாணவர் ஹரி ஓவியப் பயிற்சிக்காக - கலைத்திருவிழாப் போட்டிக்காக முதல் முறையாக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது நான் சிறுவயதில் வரைந்த ஓவியங்களைக் காட்டிக் கொண்டிருந்தபொழுது ஏதேச்சையாக இது கிடைத்தது..பார்த்தால் அடுத்த நாள் - ( அதாவது இன்று ) ரஜினிக்குப் பிறந்த நாள்..சரி இதை ஒரு பதிவாகப் போட முடிவு செய்து அப்போதே ஒரு பதிவாகவும் போட்டிருந்தேன்.
அந்தப் பதிவு இன்று மெம்மரியில் காட்டியது. அந்தப் பதிவில் உள்ள படங்களில் போட்டிருந்த நான் வரைந்த படமானது காலத்தின் கோலத்தால் ஓரங்கள் கிழிந்து போய் , படம் அழுக்காகி மிக மோசமாக இருந்தது.
இப்பொழுதுதான் A I இருக்கிறதே ... இந்தக் கிழிசல் படத்தை அப்படியே A I யிடம் கொடுத்து ஓரங்களை சரி செய்து தரவும் , தூசுகள் போன்றவற்றை நீக்கித் தரவும் சொல்லியிருந்தேன்.
அதன்படி அது செய்து தந்த படம்தான் கடைசியில் இருப்பது.
இதேபோல தர்மதுரை என்றொரு படம் .அந்தப் படத்தின் ஸ்டில் ஒன்று ...கூலிங் க்ளாஸ் போட்ட படி இருக்கும் ஒரு ஸ்டைலான லுக் உள்ள படத்தை 4 க்கு 3 சைஸ் கார்ட்போர்ட்-ல் ஆயில் பெயிண்ட் கொண்டு வரைந்திருந்தேன்...அட்டகாசமாக வந்திருந்தது..ஆனால் அந்தப் படம் காலவோட்டத்தில்.... சரியாக பாதுகாக்கத் தவறியால் மழையில் நனைந்து ஊறிப்போய் வீணாகி விட்டது...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி சார்..
நன்றி: முத்துக்குமரன் சுரேஷ்