இந்தியாவில் உருவாக்கப்பட்ட பிரபல நிறுவனங்கள்

indian-industries
இந்தியாவில் உருவாக்கப்பட்ட பிரபல நிறுவனங்கள்

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் என்னென்ன? எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

1/10
1945ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு முன் உருவாக்கப்பட்ட பஜாஜ், இன்று உலகளவில் பிரபலமான மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. 80 ஆண்டுகள் பழமையான நிறுவனமாகும்.

2/10
1946ம் ஆண்டு அமுல் நிறுவனம் உருவாக்கப்பட்டது. பால் பொருட்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் 79 வருடங்களை கடந்தும் உலகளவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் பால் உற்பத்தி நிறுவனமாக உள்ளது.

3/10
1945ம் ஆண்டு மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் வில்லிஸ் ஜீப் வாகனத்தை உற்பத்தி செய்த இந்த நிறுவனம் இன்று உலகளவில் பிரபலமான கார் நிறுவனமாக ஜொலித்து வருகிறது. 80 ஆண்டுகள் பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

4/10
1932ம் ஆண்டு JRD டாட்டாவினால் உருவாக்கப்பட்ட விமான நிறுவனம் ஏர் இந்தியா. இன்றும் மக்கள் பணியில் இருந்து வருகிறது. 93 ஆண்டுகள் பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

5/10
பிரபலமான காலணி நிறுவனம் பாட்டா. 1931ம் ஆண்டு நிறுவப்பட்டு இந்த நிறுவனம் தற்போது உலகளவில் பிரபலமான காலணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. 112 ஆண்டுகள் பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

6/10
1929ம் ஆண்டு ஜிடி மருந்து நிறுவனம் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் BOROLINE என்ற ஆன்டிசெப்டிக் மற்றும் வலி நிவாரணம் கிரீமிக்கு பிரபலமானது. இன்று மக்கள் இந்த கிரீமை பயன்படுத்தி வருகின்றனர். 96 ஆண்டுகள் பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

7/10
1942ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெயிண்ட் நிறுவனம் ஏசியன் பெயிண்ட். இரண்டாம் உலகப்போரின் போது நான்கு நண்பர்களால் மும்பையில் உருவாக்கப்பட்டது. இன்று இந்தியாவில் நம்பர் ஒன் பெயிண்ட் நிறுவனமாக இருந்து வருகிறது. 83 ஆண்டுகள் பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

8/10
1907ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்பத் நிறுவனம் Rooh Afza. 118 வருடங்களை கடந்தும் இன்றும் மக்களால் இந்த யுனானி சர்பத் ருசிக்கப்படுகிறது.

9/10
நம் சிறுவயதில் பலரின் ஃபேவரைட் பிஸ்கெட்டாக இருந்தது பார்லே ஜி. 1929ம் ஆண்டு பார்லே ஜி நிறுவனம் உருவாக்கப்பட்டது. இன்று வரை பலரின் ஃபேவரைட் பிஸ்கெட்டாக இருந்து வருகிறது. 96 ஆண்டுகள் பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

10/10
1916ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோப் நிறுவனம் மைசூர் சாண்டல் சோப். சந்தன எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் இந்த சோப் உலகளவில் பிரபலமாக இருந்து வருகிறது. இன்றும் பலருக்கு பிடித்தமான சோப்பாக இருந்து வருகிறது. 109 ஆண்டுகள் பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.