அசுப் பள்ளிகளில் 6-12 வரை படித்து, தற்போது கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 18-ம் தேதி வரை நீட்டிப்பு.
தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியர் உயர் கல்வியில் சேருவதை ஊக்கப்படுத்த, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அந்த நிதியை, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கடைசி தேதி கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதி வரை என கூறப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் ஜூலை மாதம் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.