Breaking News :

Saturday, April 20
.

புத்தகத்தின் பெயர்:- என் கதை


புத்தகத்தின பெயர்:-  என் கதை 

**ஆசிரியர் :-          *கமலா தாஸ்***

**தமிழில் :-              *நிர்மால்யா***

**பக்கம்:-                   *160 **

**வெளியீடு :-           *காலச் சுவடு * * * * **

**தொலைபேசி :-    *காமன் ஃபோக்ஸ் ***

**                                   *91 7550174762*.**

**மனிதர்கள் தங்கள் இன்ப துன்பங்களை யாரிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் பலதரப்பட்ட உணர்வுகள் அலைகளை விட மிக வேகமாக அவன் உடம்பிற்குள் வீசிக்கொண்டே இருக்கும். அது சிலவேளைகளில் சிலருக்கு மேலெழும்பலாம், சிலருக்கு வந்துவந்து  போகலாம், சிலருக்கு வந்தாலும் அதனை தனது பலம் கொண்டு அடக்கிவிடுவார்கள். பாலிய வயதில் தொடங்கி அவர்கள் மாண்டு போகும் வரைக்கும் உணர்வுகள் மாற்றமடைய நிறைய வாய்ப்புகள் உண்டு. அது அவரவர் ஆன்மாக்கள் அவர்களுடைய மனதுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் படி அமையலாம். ஒரு சிலருக்கு அந்த உணர்வுகள் சில காலத்தின் பின் அதனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துப் பாதுகாக்க முடியாத கட்டத்தில் அவை பல வடிவங்களில் வெளியே தள்ளப்படுகின்றன.**

**ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் பலவகைப்பட்ட குமுறல்கள் இருப்பதை எல்லோரும் அறிவார்கள். அது பல வகையிலும் கட்டுண்டு கிடக்கிறது. அதனை அவிழ்த்துவிடாது அவளை ஏதோ ஒரு சக்தி தடுத்தும் வருகிறது. அந்த சக்தி குடும்பமாக இருக்கலாம், சமூகமாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம், அல்லது தனக்குள் போட்டுக்கொள்ளப்பட்ட அகங்காரமாக இருக்கலாம். அவை ஏதோவொரு காலகட்டத்தில், இந்தப் பிரபஞ்சத்திடம் அவை அனைத்தையும் கூறிவிடுகிறாள். அதன் எதிரொலியாக அவள் பல எதிர்ப்புகளையும் சந்திக்கிறாள். அப்படிப்பட்ட ஒரு நீண்ட வரலாறுதான், இந்த **என் கதை ** என்னும் தன்வரலாற்றுப் படைப்பாகும்.**

**மலையாளத்தில் வெளியான தன்வரலாற்றுக் கதைகளில் என் கதை யின் ஆசிரியர் *கமலா தாஸ். *இதனை மிகச் சிறப்பாக தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளார் நிர்மால்யா. என்னைப் பொறுத்தவரை, கதையை வாசிக்கும் போது, கமலா தாஸே, எங்களுடன் நேரில் உரையாடுவதுபோல் ஒரு பிரமை ஏற்படுகிறது என்றே சொல்லாம். தனது வாழ்வின் சந்தோஷமாக இருந்த நாட்களை விட, கறைபடிந்த சோகமான நாட்களையே இங்கு கூடுதல் பதிவு செய்கிறார். வசதி படைத்த பெற்றோர்களுக்கு மகளாகப் பிறந்த கமலா என்கிற மாதவிக்குட்டி, அவரது சொந்த ஊரான நாலப்பாட்டி யிலும், கல்கத்தாவிலும், புது தில்லியிலும் மாறிமாறி தனது வாழ்வினைக் கழித்துள்ளார்.**

**இவர் ஆரம்ப காலங்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறு கதைகள் என்பவற்றை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதியிருந்தாலும், கமலா தாஸை த் திரும்பிப்பார்க்கவைத்தது, அவரின் *என் கதை *தான் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமேயில்லை என்று சொல்லலாம். இங்கே ஆசிரியர் சமூகத்தையும், தங்களது மரபுக் கோட்பாடுகளை யும் கடுமையாகத் தூக்கி எறிகிறார். அதற்குரிய காரணத்தையும் முன்வைக்க மறக்கவில்லை. சிறு வயதில் பாடசாலை யிலும் சரி, பாடசாலை விடுதிகளில் சரி தான்பட்ட அவமானங்களையும், தான் ஏன் இந்தக் கறுத்த தோலுடன் பிறந்தேன் என்றும், தனது எண்ணங்களை எங்கேயுமே முன்வைக்க முடியவில்லை என்றும் பல இடங்களில் பதிவாக்குகிறார்.**

**காதல் வாழ்க்கையில் அவர் மனதார நேசித்த ஆண்களை இங்கே அப்பட்டமாக எடுத்துரைக்கும் போது, தனது உணர்ச்சிகளை தத்துரூபவமாக வெளிக்காட்டத் தவறவில்லை.  திருமணத்தின் பின்னர், அவரது கணவன் செய்த தவறுகளால் மனம் உடைந்து, நீண்ட காலம் வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார்.**

** தங்களது கலாச்சார பண்புகளை வெறுக்கும் அவர், பாசத்துக்காகவும் அரவணைப்புக்காகவும் சிறுவயதிலிருந்தே ஏங்கிய ஏக்கம் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பெற்றோர்கள் கட்டியணைக்காத ஒரு இறுக்கத்தை தான் தனது 18 வயது கல்லூரி மாணவியிடமிருந்து பெற்ற துயரத்தை சுட்டிக்காட்டுகிறார்.**

** 3 பிள்ளைகளுக்குத் தாயான கமலா தாஸ் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துவிட முடிவெடுத்தார். கணவன் ஏனைய பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டபோது, குடிவகையில் நாட்டம் செலுத்தி பின் 2 தடவைகள் அறுவைசிகிச்சை மூலம் மூண்டும் இவ்வுலகத்திற்குள்பிரவேசித்தார். மிக முக்கியமாகச் சொன்னால், தனது கதையை எழுதுவதன் மூலம் அவர்களது உறவினர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிழம்பியது. அதனையும் பொருட்படுத்தாது தனது அடி உள்ளத்திலிருந்து எழுந்த ஆவேசங்கள், நடுக்கங்கள் யாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, தனது பேனாக்கள் வழியாக வாசிப்பாளர்களுக்குத் தந்துள்ளார் கமலா தாஸ் அவர்கள்.**

** இறுதியாக அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட பயங்கரமான மாற்றத்தை அறிய நண்பர்களே ஒருமுறை வாசித்துத்தான் பாருங்களேன்..**

**நன்றிகள்**

**பொன் விஜி - சுவிஸ்**


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.