Breaking News :

Saturday, April 20
.

தமிழறிஞர் பேராசிரியர் வீ. அரசு


தமிழறிஞர் பேராசிரியர் வீ. அரசு (V. Arasu) 
என்பவர் தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர் ஆவார்

பூண்டி கல்லூரியில் முதுகலையும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்ஃபில் பட்டமும் முடித்துள்ளார். 1984இல் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ளார்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

 க. கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை உள்ளிட்ட பல முன்னோடி ஆய்வாளர்களின் மரபில் தமிழாய்வில் பண்பாட்டு ஆய்வுகளுக்கு ஊக்கமளித்து வருபவர்..

நூல்கள் தொகுப்பு

கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல நூல்களையும், கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

வ .உ. சி. நூல் திரட்டு (புதுமைப்பித்தன் பதிப்பகம், 2002)

மயிலை சீனி.வேங்கடசாமி: இந்திய இலக்கியச் சிற்பிகள் (சாகித்திய அகாதெமி, 2004)

சிறுபத்திரிக்கை அரசியல் (கங்கு வரிசை வெளியீடு, 2006)

புதுமைப்பித்தன் கதைகள், இதழ்வழிப் பதிப்பு முழுத்திரட்டு, (அடையாளம், திருச்சி, 2011)

தமிழியல் கல்வி குறித்த உரையாடல் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)

சங்க நூல்களின் காலம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)

சித்தர் மரபு: நவீன சித்து விளையாட்டுகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)

வேலை நிறுத்தம், 1937 முதல் 1939 வரை ஜனசக்தி இதழில் வெளியான தலையங்கங்களின் தொகுப்பு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)

திராவிட இயக்கம் 100 ஆண்டுகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2012)

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள் நூறு, பதிப்பு (அடையாளம், திருச்சி, 2012)

சங்க இலக்கியம்: பன்முக வாசிப்பு, பதிப்பு (மாற்று வெளியீட்டகம், சென்னை, 2012)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013)

அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு, கட்டுரைத்தொகுப்பு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013)

ச.வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு வரலாறும் இலக்கிய வரலாறும் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013)

இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு (அடையாளம் பதிப்பகம், சென்னை, 2013)

மயிலை. சீனி.வேங்கடசாமி நூற்களஞ்சியம்: 20 தொகுதிகள்(தமிழ் மண், சென்னை, 2013)

விந்தன் உலகம் (விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை, 2016)

இது என் வாழ்நாட் பணி : பாவேந்தர் இளவரசு அவர்களின் பாவேந்தப் பயணம் (தமிழ் மண், சென்னை, 2016)

மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தமிழியல் ஆய்வு (சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு) (இளங்கணி பதிப்பகம், சென்னை)

இவருடைய ஆய்வுரைகள் குறுநூல் வடிவில் 10 நூல்களாக வெளிவந்துள்ளன. (தடாகம், சென்னை, பிப்ரவரி 2021)

ஒற்றைப்பண்பாடு எனும் வன்முறை : கீழடி அகழ்வாய்வு-தமிழ்ப்பண்பாடு

வ.உ.சி.எனும் அரசியல்போராளி : தமிழ்ச்சூழல்-வ.உ.சி

தமிழக முப்பெரும் கவிஞர் மரபில் தமிழ் ஒளி : தமிழ் மரபுக் கவிதை-வரலாறு

இலத்தீன் அமெரிக்க ஆக்கங்கள் : தமிழ்ச்சூழல்-அமரந்தா-மொழியாக்கம்

இருநூற்றாண்டு அச்சுப்பண்பாடு...இதழ்கள்

சென்னை இலௌகிக சங்கம் : தமிழ்ச்சூழல்-நாத்திக அமைப்பு

தோழர் ம.சிங்காரவேலர் எனும் சமூக அறிவியலாளர்

அண்ணாவி இளைய பத்மநாதன் : தமிழ்ச்சூழல்-சிலப்பதிகார அரங்கத்திறம்

சோவியத் புரட்சியும் தமிழ்ச்சமூகமும்

ஆபிரகாம் பண்டிதரும் விபுலானந்தரும் : தமிழ் இசை-வரலாறு


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.