Breaking News :

Tuesday, April 23
.

எழுத்தாளர் சுகி சிவம் (1954)


சுகி சிவம் (1954)
என்னும் சுப்பிரமணியம் சதாசிவம் தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார். 
சொல்வேந்தர் என அழைக்கப்படும் சுகி. சிவம், சன் தொலைக்காட்சியில் தினமும் இந்த நாள் இனிய நாள் என்ற சொற்பொழிவுத் தொடரை நிகழ்த்தி வருகிறார்.
சுகி. சிவம் முதலாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை திருச்சியிலுள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் பயின்றார்.

 அதன் பின்னர் அவர் குடும்பம் சென்னை மைலாப்பூருக்கு குடியேறியதும் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் பயின்றார். 

பின்னர் சென்னை சந்தோம் பள்ளியில் பயின்று, பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் கலை இளவர் பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று சட்ட இளவர் பட்டமும் பெற்றார்.

விருதுகள் தொகுப்பு

சுகி. சிவம் தனது சொற்பொழிவிற்காக காஞ்சி சங்கர மடம் வழங்கும் காஞ்சி பரமாச்சார்ய் சுவாமிகள் விருதினைப் பெற்றிருக்கிறார்.

சொல்வேந்தர் என்னும் விருது

கலைமாமணி விருது

படைப்புகள் தொகுப்பு

நூல்கள் தொகுப்பு
சுகி. சிவம் எழுதிய கட்டுரைகளும் ஆற்றிய சொற்பொழிவுகளும் பின்வரும் நூல்களாக வெளிவந்துள்ளன:

அச்சம் தவிர் (திசம்பர் 2006)
அபிராமி அந்தாதி தெளிவுரை
அர்த்தமுள்ள வாழ்வு (திசம்பர் 2005) (சக்தி விகடனில் எழுதிய கட்டுரைகள்)
ஆதிசங்கரர்
ஆனந்தம் பரமானந்தம்
ஆன்மீகப் பூங்காவில் அதிசயத் துளசி
இந்த நாள் இனிய நாள் – முதல் தொகுதி(சூலை 2006) (சன் தொலைக்காட்சி உரைகள்)
உணவே உயிரே (திசம்பர் 2004)
ஊருக்கு நல்லது சொல்வேன்
என் கேள்விக்கு என்ன பதில்? - பகுதி 1 (திசம்பர் 2007) (சக்தி விகடனில் வெளிவந்த கேள்வி பதில்)
ஏமாற்றாதே, ஏமாறாதே…! (ஏப்ரல் 2007) (காலைக்கதிர், சக்தி விகடன் இதழ்களில் எழுதிய கட்டுரைகள்)
ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் (திசம்பர் 2002) (கல்கி இதழில் 1995 ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரைகள்)
ஒளி பரவட்டும்
கந்தர் அனுபூதி
கம்பன் நேற்று – இன்று - நாளை (ஆகத்து 2001) (அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு)
கனவு மெய்ப்படும் (ஆகத்து 2002)
கிரியா பாபாஜி
கீதை விளக்கம்
கும்பாபிஷேகம்
சமயம் ஒரு புதிய பார்வை
சிந்தனை முத்துக்கள்
சுந்தர காண்டம்
சொன்னார்கள் சொன்னார்கள் சொன்னார்கள் - 1
சொன்னார்கள் சொன்னார்கள் சொன்னார்கள் - 2
ஞானமலர்கள் (நவம்பர் 2001) (கல்கி இதழில் எழுதிய கட்டுரைகள்)
நல்ல குடும்பம் நமது இலட்சியம் (சூலை 2003) (குங்குமம் இதழில் எழுதிய கட்டுரைகள்)
நல்ல வண்ணம் வாழலாம் (நவம்பர் 2001) (கல்கி இதழில் எழுதிய கட்டுரைகள்)
நினைப்பதும் நடப்பதும் (ஆகத்து 2004)
படிக்க ஜெயிக்க! (சனவரி 2005)
பிரார்த்தனை
பெண்ணே நீ வாழ்க
மனசே நீ ஒரு மந்திரச் சாவி
மனிதனும் தெய்வமாகலாம் (திசம்பர் 2002)
வாழப் பழகுவோம் வாருங்கள் (செப்டம்பர் 2002)
வாழ்தல் ஒரு கலை
வாழ்ந்து பார்க்கலாம் வா
வாழ்வியல் சிந்தனைகள்
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்
வெற்றி நிச்சயம்
வெற்றி மீது வெற்றி வந்து
முதல் இடம்

ஒலி நாடாக்கள் தொகுப்பு
சுகி. சிவத்தின் சொற்பொழிவுகள் ஒலிநாடாக்களாக வெளிவந்தன. அவை:

பிள்ளையார்(பட்டி) பெருமை
கிரிவல மகிமை
திருவண்ணாமலைத் தலவரலாறு
சிந்தனை முத்துக்கள்
வெற்றி நிச்சயம்
வள்ளுவர் வழியில்


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.