ஆமா..பாவம் தான். அவன் ஏமாத்துறானோ, இல்ல எதுவும் செய்யறானோ, கை நீட்டி எதாவது தாங்க என மற்றவர் முன் கையேந்துவது பெரிய பாவம் தான். சாப்பாட்டுக்கோ இல்லை, அவங்களுககு பிடித்த எதுக்கோ, தன் அத்தியாவசிய தேவைக்கு கை ஏந்துகிறார்கள்.
ஒரு நிமிடம் நினைத்து பார்க்கவும். எங்காவது நாம் யாரிடமாவது ஒரு அந்நிய நபரிடம் 10 ரூபாய் கொடுக்க முடியுமா என கேட்க எவ்வளவு வெட்கமாக இருக்கும்... ம்ம்ம்.
அவ்ளோதான். பிச்சை கேட்பவர்கள்,
சொத்தை எழுதி தா..
உன் பர்சை தா..
உன்னிடம் உள்ள எல்லா பணத்தையும் தா..
உன்னிடம் என்னலாம் இருக்கோ எல்லாம் தா..
என்றெல்லாம் கேட்பது இல்லை.
சாப்பாட்டுக்கு 20 ரூபாய் தாம்மா..
பிள்ளைக்கு ஒரு பத்து ரூபாய் தாம்மா..
5 ரூபாய் தாம்மா..
இப்படி 10 அல்லது 20 ரூபாய் கைநீட்டி கேட்பவருக்கு கொடுப்பதில் அதென்ன பாவம் நமக்கு வந்துவிட போகுது.
சாப்பாடு கொண்டு வந்து தரும் டெலிவரி மனிதர்களுக்கு 10 முதல் 30 வரை டிப்ஸ் கொடுக்கிறோம்.
வீடு வீடாக வந்து பெரிய வேனில் டிரஸ்ட்ககு பணம், அநாதை ஆசிரமத்தில் உள்ளவங்களுக்கு ஆடை என சிலர் வண்டி கொண்டு வந்து ஏமாற்றி வாங்கி போவது பிச்சையில் வராது.
யோசிக்கவே மாட்டோம். அநாதை ஆசிரமம்னு துண்டு சீட்டை பார்த்து 50/ 100 னு குடுப்போம். அதை நேராக போய் கூட கொடுக்கலாம்/ அனுப்பலாம். கை நீட்டி ,பிச்சை போல லஞ்சம் வாங்கும், லஞ்ச மகா பிரபுக்களிடம் ஏன், இந்த ஒரு அரசு வேலைக்கு 500 /100 வாங்குறனு கேட்க மாட்டோம்.
இவங்க எல்லாரும் தான் உண்மையில் ஏமாற்றுபவர்கள். அதெல்லாம் தப்பா தெரியாது… ம்ம்ம் ஒன்றுமில்லாத பிச்சை எடுக்கும் ரோட்டோரத்தில் உயிர் இருந்தும் , தன் அத்தியாவசிய தேவைக்கு பிச்சை எடுப்பவன் ஏமாத்துவான் என நம் நினைப்பு…
ஒன்னுமில்லை. நம் மனசு தான் காரணம். அவங்க நம்மை ஏமாத்துகிறார்களோனு, நமக்கு தோன்றலாம்.
நாம் தரும் பிச்சை காசை வச்சி அவங்க வீடு வாசல் கட்டி கோடீஸ்வரராக ஆனால் ஆகட்டுமே..
நாம் பாவம் பார்த்து கொடுக்கும், அந்த ஐந்து அல்லது பத்து ரூபாய் வச்சு கோடீஸ்வரர் ஆகப்போகுறாரா… இல்லைல. முடிந்தால் பிச்சை என கேட்பவருக்கு கொடுத்து உதவலாம். அதுவே என்னிடம் சில்லரை இல்லை என பிச்சை எடுப்பவரிடம் சொல்லாதீங்க யாரும்… ம்ம்ம்
கோவிலுக்கு போகும் முன் எத்தனை வீட்டில் உள்ள பெரியவர்கள், சில்லரை நிறைய எடுத்து போவார்கள். தெரியுமா? எதுக்கு?
அதை போலத்தான் எங்கும் போகும் முன், சில்லரையாக ஒரு 5/10/20 என வைத்து இருந்தால் என்ன?
வயதான உழைக்க முடியாதவர்களுக்கு, கை நீட்டி கேட்கும் போது, ஏதோ நம்மால் செய்ய முடிந்தது அது மட்டும் தானே?
இந்த நிலைமை எந்த ஒரு உயிருள்ள மனிதருக்கும் வரக்கூடாது…ம்ம்ம் பிச்சை என கேட்பவர், தன் மானத்தை வெட்கத்தை விட்டு கேட்பதாகவே பார்க்கிறேன்.
இருக்கிறவங்க பிச்சை கேட்க மாட்டார்கள். இல்லாதவங்க தான் கேட்பாங்க…முடிந்ததை கொடுப்போம்.
நன்றி மீனா குமார்