(அதிசயங்கள் நடக்கும்,நம்பிக்கைதான் வேண்டும்)
பக்தியுடன் உருகினால் நமக்கும் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்கும். நம்பிக்கைதான் வேண்டும்
பம்பாயில் கணபதிராம் என்பவரும், அவர் மனைவியும் பெரியவாளின் பரம பக்தர்கள்.
பெரியவாள் பாதுகையில் கற்கள் எடுத்துப் பதிக்க வேண்டுமென்பதற்காக, தனது வைரத்தோட்டையே கொடுத்தவர்கள்.
ஒரு ஆபரேஷன் செய்து கொள்வதற்காக மனைவியுடன் கணபதிராம் ஒரு மாத காலம் சென்னைக்கு வந்து தங்க வேண்டி வந்தது.புறப்படும் முன் அவர் மனைவி, பெரியவாளுக்கு ஒரு மாதம் பூஜை இல்லாமல் போகுமே என்று கவலைப்பட்டார்.
ஒரு முடிவுக்கு வந்து, ஒரு டப்பாவில் திராட்சைப் பழத்தை எடுத்து வைத்து, "இதுதான் ஒரு மாதத்துக்கு உனக்கு நைவேத்தியம் நான் திரும்பி வந்ததும் பூஜை தொடரும். மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
ஆப்ரேஷன் ஆகி வீடு திரும்பியதும் பெரியவா முன்னால் வைத்த திராட்சைப் பழம் நினைவுக்கு வந்தது.அதை எடுத்து பிரசாதத்தை குழந்தைகளுக்குக் கொடுக்கலாமென்று திறந்து பார்த்தால் ஆச்சரியம்! ஒரு பழம்கூட அதில் இல்லை.
பக்தியுடன் உருகினால் நமக்கும் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்கும். நம்பிக்கைதான் வேண்டும்.
கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.