Breaking News :

Sunday, May 19
.

நூலின் பெயர்: சொல்லாத்தையும் செய்


நூலின் பெயர்:சொல்லாத்தையும் செய்

நூலாசிரியர்: சோம வள்ளியப்பன்

மொத்த பக்கங்கள்:103

பதிப்பகம்:சிக்ஸ்த் சென்ஸ்.

இந்த நூலில் ஒவ்வொரு வரிகளும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமல்லாது அதன்படி நடக்கவும் வேண்டும்.

தொப்பிகளை கழற்றிவிட்டு வாசிக்க வாருங்கள்.( தொப்பி என்பது,'எனக்கு இது ஏற்கனவே தெரியும்' என்கிற எண்ணத்தைதான்..) 32 தலைப்புகளில் நம்மை புதிய பாதைக்கு அழைத்துச் செல்கிறார்.

கண்களை அகலத் திறந்து ,காது மடல்களை கவனமாக விரித்துவைத்து,முக்கியமாக முழுமனதுடன் கவனத்தைக் குவித்து,சுற்றி நடப்பனவற்றைக் கவனிக்க வேண்டும்.100,1000 வாய்ப்புகள் இலைமறை காயாக ,நம்மைச் சுற்றிலும்,காலுக்கு கீழும்,கைகளுக்கு மேலேயும்,தோள்களில் இடித்தபடியும் ஆடிக்கொண்டும் தொங்கிக் கொண்டிருக்கின்றன.அவற்றைப் பறிக்க வேண்டியது மட்டுமே நம் வேலை.

எல்லாக் கட்டிடங்களிலும் கதவுகள் உண்டு.ஒன்றல்ல பல.அவை நம்மை அன்புடன் வரவேற்கும் வாசல்கள்.எல்லா மனங்களுக்கும் வாசல்கள் உண்டு.இதமாகப் பேசினால்,இணக்கமாக பேசினால் அவை நமக்காகத் திறக்கும்.அங்கே சமாதானம் பிறக்கும்.

தண்ணீருக்குள் குதிக்காத வரைதான் குளிர்.குதித்தபின் அது இல்லை.குதிப்பதற்கு முன்னும் பின்பும் இருக்கிற அந்த ஒரு சில வினாடிகள்தான் பிரச்சனை.வெல்ல வேண்டியது நமது பயத்தினை,தயக்கத்தினைத்தான்.அதை வென்றுவிட்டால் ,மற்ற எல்லாவற்றையும் வென்றுவிடலாம்.

'Everything is difficult before becoming Easy 'என்ற கூற்றுப்படி எதையும்,எவராலும் கற்றுக் கொள்ள முடியும்.ஆரம்பம் என்றால் இன்னும் சுலபம்.குழந்தை மொழி கற்றுக்கொள்ளுகிறதே அப்படி.மழலை ரசிக்கப்படக் கூடும்.புதியவற்றைக் கற்றுக்கொள்ளுவோம்.தயக்கமே வேண்டாம்.சுயசார்பாக இருப்போம்.

"Whatever is worth doing is,worth doing well"விஸ்வேஸ்வரய்யா.நாம் ஒன்றைச் செய்கிறோம் என்றால் அதில் நம் முத்திரை பதியவேண்டுமா?நமக்கென்று ஒரு தரம் இருகிறதே.அது செயல்பாடுகளில் தெரியவேண்டுமா? அவசியம் தெரிய வேண்டும்.

அடுத்தவர் செய்யும் தவறுகளை உடனடியாகக் கவனிக்க முடிகிற நம்மால்,நம்மிடம் இருப்பவற்றை கவனிக்க முடியாதது மட்டுமல்ல.யாரும் அதைச் சுட்டிக்காட்டினாலும் ஒப்புக்கொள்ளக்கூடத் தயக்கமாக இருக்கும்.
இதனை எப்படிச் சரி செய்யலாம்?
மற்றவர்களிடம் நாம் பார்க்கும் சுமாரான குணங்கள்,பழக்கங்கள் நடவடிக்கைகள் எவை?அவற்றில் எவை நம்மிடமும் உள்ளன என்பதைப் பார்த்து களைவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

"Whatever human mind can conceive and believe,it can achieve" நெப்போலியன் ஹில்.
வெற்றி பெறுபவர்களுக்கும் தவறவிடுபவர்களுக்கும் இடைவெளி பல சமயங்களில் நூலிழை அளவுதான்.
இந்தப் புத்தகத்தை வெறுமனே வாசிப்பதோடு நிறுத்திவிட்டால் வெற்றி இலக்கை அடைய முடியாது.
"சொன்னவற்றை செய்"
" சொல்லாதைதையும் செய்"
"வெல்ல முடியாதவற்றையும் வெல்லலாம்"

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.