Breaking News :

Tuesday, April 16
.

பழம் பெருமை பேசுவோம்


புத்தகம்: பழம் பெருமை பேசுவோம்

விலை:145/-
ஆசிரியர்: நெய்வேலி பாரதிக்குமார்  
பதிப்பகம்: விகடன் பதிப்பகம்
பக்கங்கள்: 248

பல நாட்கள் தேடிக்கொண்டிருந்தேன் பழங்களைப் பற்றி தெரிந்து கொள்ள! தேடிக்கண்டுகொண்டேன்
என்ற மகிழ்ச்சியோடு அனுபவ உரையை பகிர்ந்து கொள்கிறேன். காய்கறிகள் பழங்கள் அனைத்தும்
நம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நன்மை தரக்கூடியது. நாம் அறிந்த தகவல்கள் அறியாத
குறிப்புக்கள் என தகவல் களஞ்சியம்தான் இந்த புத்தகம்

தகவல்கள் அனைத்தும் பழைய பாடல்கள் குறிப்புக்கள்,தகவல்கள்,தரவுகள், பழமும் பதார்த்தமும்
என்ற பெயரில் செய்முறை குறிப்புக்கள் என ஒரு வரி கூட தேவையில்லாத வரிகள் என்பது கிடையாது.
இந்த புத்தகத்தில் விளக்கியுள்ள கட்டுரைகள் சனிக்கிழமை தோறும் தினத்தந்தியில் 32 வாரங்கள் வந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்  
    #அத்திப்பழம்
    #மாம்பழம்
    #வாழைப்பழம்
    #பலாப்பழம்
    #நெல்லிக்கனி
    #நாவல்பழம்
    #கொய்யாப்பழம்
    #இலந்தைப்பழம்  
    #எலுமிச்சை
    #மாதுளை
    #வேப்பம்பழம்
    #விளாம்பழம்
    #பனம்பழம்
    #புளியம்பழம்
    #வில்வப்பழம்    
    #திராட்ச்சை
    #பேரிட்சை
    #கோவைப்பழம்
    #ஆப்பிள் பழம்
    #சீத்தாப்பழம்
    #தக்காளி
    #வெள்ளரிப்பழம்
    #பப்பாளி
    #முந்திரிப்பழம்
    #அன்னாசி
    #தர்ப்பூசணி
    #ஆரஞ்சும் சாத்துக்குடியும்
    #சப்போட்டாப்பழம்
    #ப்ளம்,செர்ரி
    #வெண்ணைப்பழம்
   
    #அத்திப்பழம்
        கி.மு.11400 முந்தைய வரலாறு. மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்கு  அத்திப்பழங்களை
கொடுத்து பிழைக்க வைத்த கதை. என பல நம்பிக்கை கதைகள் உண்டு இந்த புத்தகத்தில்.
அத்தியில் மொத்தம் 29 வகைகள் உள்ளன. மலையத்தி,சீமையத்தி, நீரத்தி, கொடியத்தி,அல்லத்தி
பேயத்தி ஆகியன அவற்றுள் சில. 100அடி வரை வளரும். 100ஆண்டுகள் வளரும். பொட்டாஷியம்,
கார்போஹைடிரேட்,மிகக் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. ஒலிம்பிக் வீரர்கள் தங்களது ஆற்றலை அதிகப்படுத்த அத்திப்பழம் உண்கிறார்கள் குறிப்பாக ஓட்டப்பந்தய வீரர்கள்.

  #மாம்பழம்
     இதைச்சொல்ல ஒரு அனுபவப் பகிர்வு போதாது. 10000வருடங்களுக்கு. முற்பட்டது கிட்டத்தட்ட
750மாம்பழ வகைகள் உள்ளன. கோவாவில் மட்டும் 100வகை மாங்கனிகள் விளைகின்றன.
save goa mango என்ற இயக்கதஹி goa பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. பல
ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்தியர்கள் மட்டுமே மாம்பழத்தை ருசித்து வந்திருக்கின்றனர்.
கணபதி முருகர் ஞானப்பழக் கதை முதல் உலகத்தையே ஒரு சுற்று சுற்றியிருக்கிறார் ஆசிரியர்.
 
    #வாழைப்பழம்
முக்கனிகளில் இரண்டாவது. முதல் பலம் என்கிற அனுமானப் போட்டியில் வாழைப்பழம் உண்டாம்(?!)
10000 வருடங்கள் பாரம்பரியமிக்கது என்று கணிக்கப்படுகிறது. விவசாய முறைக்கு கொண்டுவந்தது
கி.மு.5ஆம் நூற்றாண்டில் பயிரிடப்பட்டது. வாழையின் எல்லா பாகங்களும் உடலுக்கும் பலன்
கொடுக்கக்கூடியது. வாழைப்பழம் இதய நோய், காய்ச்சல், மலச்சிக்கல், மூட்டுவலி முதலியவற்றை
எளிதில் குறைக்கும்.

 #பலாப்பழம்
8000 வருடங்களுக்கு முற்பட்டது. உடலுக்கு புத்துணர்ச்சியும் ஆற்றலும் தரும். உடல் அதனால்
லகுவாகும். பலாப்பழத்திலுள்ள வைட்டமின் "சி" ஆண்ட்டிஆக்சிடென்ஸாக இயங்கி நோய்
எதிர்ப்புச்சக்தியை அளிக்கிறது. அதிலுள்ள சபானின் புற்று நோய் வராமல் தடுக்கிறது. பொட்டாசியத்தின்
அளவு அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்த நோய்க்கு சிறந்தது. கண் நோய்க்கு சிறந்தது. ஆஸ்துமா நோய்க்கு
சிறந்த மருந்து.

#நெல்லிக்கனி
ஆம்லா,பஞ்சரச,பகுபாலி, தாத்ரி,ஆமலகம்,அனோலா,ஜனாபாலா,கோரங்கம்,அமரபால,காயஸ்த
ஸ்ரீபால,மிருதுபால என்று நெல்லி அழைக்கப்படுகிறது. வாத,பித்த,கபத்தை போக்கக்கூடிய தன்மை
நெல்லுக்கு உண்டு. தினமும் ஒரு நெல்லி உண்டால் இருதய பலத்துடன் வாழலாம். நெல்லிக்கென்று
தனி புத்தகமே போடலாம்.

#நாவல்பழம்
4000 வருடமாக மனிதனால் வளர்க்கப்படுகிறது. 100 வருடங்கள் இதனுடைய ஆயுள் என்பது
நா+அல் = நா வறண்டு நீர் வேட்கை மிகும். கருத்து இருள் போல ஆவதால் இந்த பெயர்.
அருகதம்,நவ்வல்,ஜம்பு,சாட்டுவம்,சுரபி பத்தரை என்று வேறு பெயர்கள் உண்டு. வைட்டமின் "A"
வைட்டமின் சி, போலிக் அமிலம் ஆகியவற்றை உடையது.  பொதுவாக நாவல் பழத்தை
வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. அதிகமாகவும் உண்ணக்கூடாது புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உண்டு.

   #கொய்யாப்பழம்
கொய்யாவில் நூற்றுக்கணக்கான ரகங்கள் உண்டு. மதுப்பழக்கம் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட
கொய்யா உதவுகிறது. தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் இவ்விரண்டு பழக்கங்களும் அடியோடு விட்டுப்போகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டது. செரிமானத்திற்கு நல்லது,
பாக்டீரியாக்களுக்கும், நோய் தொற்று கிருமிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது. வெட்டு
காயத்திற்கு கொய்யா இலை மருந்தாகும்.

#இலந்தைப்பழம்
கி.மு.600 ஆம் வருடத்திலிருந்து சீனாவில் பயிரிடப்படுகிறது. 2500வருடங்களாக சீன மருத்துவத்தில்
முக்கியப் பங்கு உண்டு. சிறுநீரகம்,நுரையீரல் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சீன
இலந்தையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.  ரத்த சுத்திகரிப்பு, புற்று நோய் தடுப்பாற்றல், உடல் சூட்டினை
குறைக்கும் தன்மை, நினைவாற்றலை அதிகரிக்கும், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதீத வலி
மற்றும் கர்ப்பப்பை பிரச்சனை சரியாகிறது.

 #எலுமிச்சை
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை செய்ய போதிய மருத்துவர்கள் இல்லாமல் அவதிப்பட்டனர். பிரெஞ்சு தேசாதிச் சார்ந்த ழீன் வால்நெட் என்பவரால் உருவாக்கப்பட்ட
அரோமா தெரபி என்னும் மாற்று மருத்துவ சிகிச்சை முறை மூலம் ஏராளமான வீரர்கள்
காப்பாற்றப்பட்டனர். இந்தியாவில் பரவலாக விளையும் பழங்கள் காகஜி, ஸ்பெயினில் யுரேகா,
அமெரிக்காவில் மோனி பிரே எனும் விதைகளற்ற எலுமிச்சை,இத்தாலியில் காணப்படும் சாரண்டோ
ரகங்கள், தெற்கு ஆசியாவின் ஜாம்ப்ரி, நமது நாட்டின் கொடி எலுமிச்சை என்று பல ரகங்கள்
உண்டு.  

#மாதுளை
மிக உயர்ந்த ரகம் மாதுளையில் காந்தகர் என்ற வகை 5000 வருடங்களுக்கு முற்பட்டது. கலிபோர்னியாவில்
கருப்பு நிற மாதுளை உண்டு. பித்தத்தை போக்கும், மாதர்களுக்கு ஏற்றது. நினைவாற்றல் பெருகும்
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும், பெப்டிக் அல்சர்,காஸ்ட்ரிக் அல்சர்,
டியோடினல் அல்சர்களை குணப்படுத்தும். வயிற்றுக் கடுப்பை குணப்படுத்தும்.

#வேப்பம்பழம்
இந்த தலைமுறை சுவைத்திடா பழம். சர்க்கரை நோய், தொழு நோய்,பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள்
குடற் பூச்சிகளை அழிக்கும்.

#விளாம்பழம்
கி.மு.1ஆம் நூற்றாண்டிலேயே மருந்தாக பயன்பெற்றது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக மற்றும்
கர்ப்பப்பை புற்றுநோய்களை வராமல் தடுக்கக் கூடியது.  நாவறட்சியும் விக்கலும் தீரும். தொண்டையில்
உண்டாகும் புண் மற்றும் கொப்பளங்கள்  குணமாகும். பல் ஈறுகளுக்கு உறுதியளிக்கும். மாதவிலக்கு
சமயத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் ஆகியன நீங்கும். பாம்பு கடிக்கு விஷ முறிவு
மஞ்சள் விளா, கோட் விளா என இரு வகைகள் உண்டு

#பனம்பழம்
தமிழகத்தின் தேசிய மரம், இதற்கென்று தனி புத்தகமே போடலாம். பீட்டா கரோட்டின் எனப்படும்
வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு மிகவும் நல்லது. குரல் வளத்தை காக்கும், எலும்புகள் வலுவடையும்
கண்நோய், பற்கள் வலுவிற்கு, உடல் வெப்பம் தணிக்க, அம்மை நோய் சரியாக என்று இதன்
பலன்கள் அதிகம். கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து,  என நிறைய குணங்கள் நிரம்பியது.

#புளியம்பழம்
நவீன அடுப்புகள் புழக்கத்துக்கு வராத காலங்களிலில் கிராம பகுதிகளில் பழத்தை பிரிக்கும்போது
கிடைக்கிற மீ ஓட்டையும் மேல் காம்பையும் மாடு சாணத்தில் கலந்து உருண்டையாக பிடித்து
காய வைப்பார்கள்.  அதுதான் அன்று எரிபொருள். பித்தளை சாமான்கள் அந்த காலத்தில்
பயன்பாட்டில் இருந்ததால் அதைத் துலக்க பயன்படுத்துவார்கள். வெளிப்புற மருந்துக்கு
பயன்படுத்தியுள்ளார்கள். உள்புற மருந்துக்கு புளி பயன்பாட்டில் இல்லை. கொடம்புளி எனும் ரகம்
எடை குறைப்பிற்கு பயன்படுத்தியுள்ளனர்.

 #வில்வப்பழம்
மாரேடு,பிலபத்ரா,கும்பாலா,பில்வா,கூவிளம்,கூவிளம்,சிவத்துருமம்,நின்மலி,மாலூரம்,என்ற
பெயர்கள் உண்டு.வில்வ கஷாயம் பேதி,கபம்,வாந்தி,குமட்டல்,கண்ணெரிச்சல்,தோல்நோய்கள்,மூலம் போன்ற பல நோய்கள் குணமாகும்.

#திராட்ச்சை
3200ஆண்டுகளுக்கு முந்தையது. உலக வேளாண் ஆய்வு நிறுவனத்தின் புள்ளி விவரத்தின்
அடிப்படையில் 8000 மேற்பட்ட ரகங்கள் உலகெங்கிலும் இருந்துள்ளது. நம் இந்தியாவில் கருப்பு திராட்சை,
பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, விதைகளிலிலே திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை
எனப் பல ரகங்கள் உள்ளன. ஒற்றைத்தலைவலி, சிறுநீரகத் தொல்லை குறைக்க நைட்ரிக் அமிலம்
அளவை அதிகரிப்பதால் ரத்தக் கட்டிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

#பேரிட்சை
மேற்காசிய தாவர இனத்தைச் சார்ந்த பேரிச்சம் 2500 வகைகள் உள்ளது. அஃபாண்டி.,அஜ்வா,குத்தாக்,லூனா
மாப்ரும்,ரபியா,சவாடா,சஃப்ரி என்பன. கெட்ட கொழுப்பை உறிஞ்சி அகற்றும் ஆற்றல், மாதவிடாய் அதிக உதிரப்போக்கினால் ஏற்படும் தளர்ச்சி,காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை
மீண்டும் பெற, என பலனளிக்கக்கூடியது. இதை உண்டால் உடனே வெண்ணீர் அருந்த வேண்டும். ஏனென்றால் இது சிறிது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

 #கோவைப்பழம்
செல்லமாக Baby water melon என்று அழைக்கப்படுகிறது. இதன் இலை, பூ, காய், பழம், தண்டு, வேர் என எல்லா பாகங்களும் மருத்துவ குணமுடையதாகும். தொழுநோயை தீர்க்கும் குணமுடையது. ஆஸ்துமா,மூச்சிரைப்பு, மஞ்சல்காமாலைக்கு சிறந்த மருந்து. க்ளுகோஸ்-6,பாஸ்பேட்ஸ் ஆகிய இந்த வேதிப்பொருட்கள் சர்க்கரை அளவை குறைக்கிறது. பல்வலி குணமாகும். கோவைப்பழ டானிக்குகள், குளிர்பானங்கள் தாய்லாந்தில் விற்பனையாகின்றன. சர்க்கரை அளவை குறைப்பதால் கர்ப்பவதிகள் பழமாக உண்பதைத் தவிர்க்கவும்.

 #ஆப்பிள் பழம்
ஊட்டச்சத்து உணவாக எல்லோராலும் உண்ணப்படும் பழம். சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த பழம். 
1904ஆம் ஆண்டு இவரின் ஸ்டோக்ஸ் என்பவர் தொழுநோயாளிகளை குணப்படுத்த அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தார். ஆப்பிள் கன்றுகள் ஹிமாச்சல் பிரதேசத்தில் நன்கு வளரும் என்று நட்டார். ஆப்பிளை  தமிழில் அரத்திப் பழம் என்றும் குமளிப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. 7000 பிரபலமான வகைகளும்
2800 அரிய வகைகளும் இருக்கின்றனவாம். டெலிசியஸ்,காலா,கிரான்னி,கோல்டன் டெலிசியஸ், ஃ பியூஜி,பிங்க் லேடி ஆகிய வகைகள் உள்ளன . ஒரு சுவாரசியமான தகவல் நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு வகை என தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உலகம் முழுக்க உள்ள ஆப்பிள் வகைகளை சாப்பிட்டு முடிக்க 27வருடங்களும் மூன்று மாதங்களும் ஆகுமாம்.

#சீத்தாப்பழம்
சீதளப்பழம் என்பது மருவி சீத்தாப்பழம் என்றாகியது. இயற்கை தரும் ஐஸ்கிரீம் என்று புகழ்கின்றனர்.
இதில் மூன்று வகைகள் உண்டு. முள் சீதா,ராமசீதா,நாட்டு சீத்தாப்பழம். முள் சீத்தாப்பழம் புற்று
நோய்க்கு ஓர் அற்புதமான மருந்து. கீமோதெரபி எனப்படும் சிகிச்சையை விட 10000மடங்கு அதிகம் பலன் தரக்கூடியதும். இரும்புசத்து அதிகம் உள்ளதால்  ரத்த சோகைக்கு நல்லது.வைட்டமின் B1, B2, புரதம், நல்ல கொழுப்பு, பாஸ்பரஸ்,இரும்பு சத்து ஆகியவை இதில்அடங்கும்.

#தக்காளி
கி.பி.500 ல்  பயிரிட்டிருக்கின்றனர்.  தக்காளிக்கு  மிகப்பெரிய வரலாறு இருந்திருக்கிறது. 7500 வகை தக்காளிகள் உலகெங்கிலும் உள்ளதாக கருத்து உள்ளது. மணத்தக்காளி,பேத்தக்காளி என்னும் இனங்கள் இந்தியாவில் உள்ளன. அமெரிக்க தக்காளியை தமிழர் சீமைத்தக்காளி எனக் கூறுவர். 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு தக்காளி அறிமுகமானது. இன்றைய தக்காளி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. தக்காளியில் உள்ள சிட்ரிக்,பாஸ்போரிக் அமிலம் இதற்கு உதவும் என்கிறார்கள்.

#வெள்ளரிப்பழம்
3500 வருடங்களாக பயன்பாட்டில் இருக்கிறது. ஊர்வரப்பன,கூதாரி,படோலிகை,விரலி,கொடுங்காய் என்பன தமிழ்ப்பெயர்களாகும். உடல் சூட்டிற்கு நல்லது. பித்தத்தை தணிக்கும். குடலுக்கு நல்லது. சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்யும். தலை சுற்றல் வாந்தியை சரி செய்யும்.தோல் சுருக்கம் நீங்கும். கருமை நிறம் மாறி முகம் பொலிவு பெறும். 

#பப்பாளி
உடல் வலுவையும், ஆண்மைத்தன்மையையும் அதிகரிக்கும் தன்மை பப்பாளிக்கு உண்டு. பப்பாளி உற்பத்தியில் இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. கபோஹா,சன்ரைஸ்,ரயின்போ ஆகிய வகைகள் உலகெங்கிலும் உள்ளதாக தகவல்கள் உள்ளது. பப்பாளியிலுள்ள பப்பாயின் வேதிப் பொருள் ஜீரண சக்திக்கு ஏற்றது. ரத்தவிருத்தி,உடல் பலம், உடல் பருமனை குறைக்கும் திறன், மூல நோய்கள் குணமாதல்,ரத்தத்தில் கலக்கும் எந்தவகை கிருமியாக இருந்தாலும் இறந்துவிடும். சொறி சிரங்கு, காயம் ஆகியவற்றை போக்கிவிடும். கண்பார்வை கூர்மையடையும். நீரடைப்பு குணமாகும். பல் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

#முந்திரிப்பழம்  #அன்னாசி #தர்ப்பூசணி #ஆரஞ்சும் சாத்துக்குடியும் #சப்போட்டாப்பழம் #ப்ளம்,செர்ரி
#வெண்ணைப்பழம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை கண்டிப்பாக அனைவரும்
படிக்க வேண்டியது அவசியம். நம் முன்னோர்கள் எவ்வாறு ஆரோக்கியமான உணவை உண்டார்கள், நோயிலிருந்து தற்காத்துக் கொண்டார்கள் என்பதை இந்த நூலில் அறியலாம்.

ஒவ்வொரு பழத்திற்கும் உள்ள உலக வரலாறு இந்திய வரலாறு, பழங்ககால பாடல்கள்,மருத்துவ குணங்கள், புள்ளி விபரங்கள், அதன் வகைகள், பெயர்க்காரணங்கள் என்று எல்லா விளக்கங்களும் இந்த நூலில் உண்டு

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.