Breaking News :

Friday, January 17
.

கேரள பெண்கள் அழகுடன் இருக்க காரணம்?


கடவுளின் தேசமான கேரளாவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர்களின் மொழியை போலவே அவர்களும் மெல்லினமானவர்கள். அதிலும் மிக முக்கியமாக தெரிந்த ஒரு விஷயம் மேக்கப் போடாமலும் மினுமினுக்கும் அழகு கொண்டவர்கள் கேரளப் பெண்கள்.

பெண்களை கண்டு பெண்களே பொறாமை கொள்ளும் அளவிற்கு இயற்கையான வனப்புடன் திகழும் கேரள பெண்களின் அழகு ரகசியம் சிலவற்றை உங்களுக்காக ரகசியமாக கொடுக்கிறோம். நீங்கள் அதனை பயன்படுத்தி மினுமினுக்கும் தேகம் மற்றும் ஜொலிக்கும் முக அழகை பெறுங்கள்.

கேரள உணவு முறை:

ஒவ்வொரு மாநிலத்திற்கென்று ஒரு உணவு பழக்க வழக்கம் உண்டு. கேரளாவில் பிரபலமானது அதன் மிகப் பெரிய அரிசிகள் கொண்ட சாதம் தான். அதில்தான் சாதாரண அரிசியை விட ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. நிறம் மாற்றி பாலிஷ் செய்யப்படாத கேரளா அரிசியை மாதத்தில் சில நாட்கள் எடுத்துக் கொள்வது உங்கள் அழகை மேலும் கூட்டும்.

பால்:

கேரள பெண்களின் உடல் வனப்பிற்கு பெரிதும் உதவுவது பால்தான். முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து அவைகளை மூடி விடும் குணம் பாலிற்கு உள்ளது. மேலும் முகத்தின் நிறம் மங்காமல் காக்கும்.

முல்தானி மெட்டி:

கேரளாவில் மரங்கள் நிறைய உண்டு. அவர்களுக்கு இயற்கையான பல உயர்தர பொருள்கள் ஏற்க கூடிய விலையில் கிடைக்கும். அதில் ஒன்றுதான் தூய்மையான சந்தனம். இந்த சந்தனத்தை முல்தானி மெட்டியோடு கலந்து பசை போலாக்கி முகத்தில் தடவி காய விடுவதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி நிறம் மேலும் கூடும். மேலும் கரும்புள்ளிகள் வராமல் முகம் பளிங்கு போல மின்னும்.

முகத்தில் உதடுகளின் மேல் மெல்லிய முடிகள் மற்றும் தாடையின் கீழ் மெல்லிய முடிகள் சில பெண்களுக்கு இருப்பது சகஜம்தான். இதனை நீக்க நாம் பார்லர் செல்கிறோம். கேரள பெண்களோ ஒரு ஸ்பெஷல் கலவையை உபயோகித்து முடிகளை நீக்குகிறார்கள்.
நல்லெண்ணை, கோதுமை மாவு மற்றும் மஞ்சள் பொடியை பயன்படுத்தி அவர்கள் தங்கள் முகத்தை கழுவுகையில் தேவையற்ற ரோமங்கள் தானாகவே விழுந்து விடுகிறது.

தேங்காய்:

ஊருக்கெல்லாம் தெரிந்த அந்த ஒரே ரகசியம்தான். கேரள பெண்களை மிக அழகாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தேங்காய் மற்றும் அது சார்ந்த பொருள்கள்தான்.

குளிக்கும் முன்பு வெயில் படும் இடமெல்லாம் தேங்காய் எண்ணெய் தடவி பின்னர் கடலைமாவு அல்லது பாசிப்பயிறு மாவு போட்டு குளிப்பதால்தான் இவர்கள் தேகம் மின்னுகிறது. அதுவும் பெரும்பாலான பெண்கள் ஆற்று நீரில் குளிப்பதால் அதில் உள்ள மினரல்கள் உடலில் ஏறுகின்றன.

கேரளாவெங்கும் அதிகமாக காணப்படும் தென்னை மரங்கள்தான் கேரளாவின் அழகு ரகசியமே.. அதில் இருந்து வரும் தேங்காயை பால் எடுத்து அதனை தலை மற்றும் உடல் முழுதும் தடவுகின்றனர். அதன் பின்னர் குளிக்கின்றனர். இதனால் தேங்காயின் சத்துக்கள் அனைத்தும் சருமத்திற்கு போகிறது. மேலும் தேங்காயின் வழவழப்பை போலவே கேரள பெண்களின் மேனியும் பளபளப்பு கூடுகிறது. கூந்தலும் 60 வயது ஆனாலும் மறைக்காமல் கருகருவென நீளமாக வளர்கிறது.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த பெண்கள் பெரும்பாலானோர் கொள்ளை அழகுடன் இருக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே கேரள மாநிலத்தை சேர்ந்த பெண்கள் பெரும்பாலானோர் கொள்ளை அழகுடன் இருக்கின்றனர்.
கேரள பெண்களின் நீளமான கருங்கூந்தல், குண்டு குண்டு, கண்கள், மென்மையான, பொலிவான சருமம் என அனைத்தும் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய விஷயங்களாக உள்ளன.அப்படிப்பட்ட அவர்களின் அழகிற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி பார்க்கலாம்.

கேரளா மாநிலமானது இயற்கை அழகுகளால் சூழப்பட்ட ஒரு அற்புதமான இடம். இந்த இயற்கை அழகு தான் அம்மாநில பெண்களின் அழகிற்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கேரளத்துப் பெண்கள் அனைவரும் தினமும் தங்களது தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள். இவர்கள் தினசரி தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள்.

  ஷாம்புவிற்குப் பதிலாக சீயக்காவை, தலைக்கு வைத்து பயன்படுத்துகின்றார்கள். தலையில் பொடுகு வராமல் இருப்பதற்காக, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள்.

கேரளத்து பெண்களின் நீண்ட கூந்தலின் மிக முக்கியமான ரகசியம் இதுதான். அது என்னவென்றால் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்குபதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்.

சருமம் மென்மையாக இருப்பதற்கு காரணம், முகத்திற்கு மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள். அதோடு, முக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள் இதன் காரணமாகத் தான் அவர்களது முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது.

கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது பேஸ் பேக் போடுவார்கள். அதிலும், கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள்.

இதுவும் அவர்களுடைய சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு, காரணம். கேரளத்து பெண்களின் கண்கள் மிகப் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களுடைய கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள்.

விற்பனைக்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவார்கள். கேரளத்து பெண்கள் அனைவரும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள்.

இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக இருக்கின்றது இவை தான் கேரளப் பெண்கள் கொள்ளை அழகுடன் ஜொலிப்பதற்கு காரணம்.

நன்றி: Udhayendiran Annachi

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.