Breaking News :

Monday, May 20
.

கண்ணதாசன் கைகளில் கட்டுப்போட்ட பெரியவா - காஞ்சி மகான் பெரியவா


"நான் என்னவோ  நெல்லுப் பொரி, அவல் மட்டும் சாப்பிடறதை பெரிய விஷயமாக நினைக்கிறா, சில பேர்.   மற்றவர்களோட  கம்பேர் பண்ணினால்,இது ஒன்றும் ஒசத்தி இல்லே..." பெரியவா

.

"பாரத தேசத்திலே எத்தனையோ மஹான்கள் இருந்திருக்கா. ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒரு விசேஷம் இருக்கும்."  (தன்னை முன்னுறுத்தி தொடர்ந்து கண்ணதாசன் எழுத தடைவிதித்த பெரியவா)

 

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.-

புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

 

 

3கவியரசர் கண்ணதாசன், தான் எழுதிய 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற புத்தகத்தை ஒரு தட்டில் வைத்து, பெரியவாளிடம் சமர்ப்பித்தார்.

 

பெரியவாள், புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தார்கள்.

 

"பெரிய விஷயங்களையெல்லாம், எளிமையா எழுதியிருக்கே போலிருக்கு"---பெரியவா

 

கவிஞரின் இதயம் ஆனந்தத்தில், திளைத்துக் கொண்டிருந்தது.

 

பெரியவாள் தொடர்ந்தார்கள்.

 

பாரத தேசத்திலே, எத்தனையோ மஹான்கள் இருந்திருக்கா. ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒரு விசேஷம் இருக்கும்.

 

"சில சந்யாஸிகள், பால் மட்டுமே உட்கொண்டு வாழ்ந்திருக்கா. ஒருத்தர் கங்காஜலம் மட்டும்தான் சாப்பிடுவாராம்.! ஸித்தர்கள் எல்லாம் ரொம்ப ஆஸ்சர்யமான பழக்க வழக்கங்கள் கடைப்பிடிச்சிருக்கா. சில ஸித்தர்கள், பச்சையாகக் கருணைக் கிழங்கை மட்டும்  சாப்பிடுவா"

 

"ஓருத்தர் மரத்திலேயே தங்கியிருந்தார். இன்னொருத்தர்,யமுனை நதி நடுவில் பரிசல் நிறுத்தி,அதிலேயே இருந்திருக்கிறார்"

 

கொஞ்சம் நிறுத்தி விட்டு மறுபடியும் சொன்னார்கள்,பெரியவா.

 

"நான் என்னவோ நெல்லுப் பொரி அவல் மட்டும் சாப்பிடறதை பெரிய விஷயமாக நினைக்கிறா சில பேர் மற்றவர்களோட கம்பேர் பண்ணினால், இது ஒன்றும் ஒசத்தி இல்லே.."

 

மறுபடியும் இடைவெளி.

 

"இந்தப் புஸ்தகத்திலே, என்னைப் பற்றி எழுதியிருக்கியோ..."--பெரியவா

 

"முன்கூட்டியே திட்டமிட்டு, வரிசையாக வெளியாகிற புத்தகம். அடுத்த புத்தகத்திலேதான் பெரியவாளைப் பற்றி விரிவாக எழுதணும்.. இந்தப் புத்தகத்தில், மூணு, நாலு வரிதான்  எழுதியிருக்கேன்".. கண்ணதாசன்

 

"அதுபோதும்...இதைத்தான் சொல்ல வந்தேன்.."- பெரியவா.

 

கண்ணதாசன், கைகளில் கட்டுப் போட்டு விட்டார்கள், பெரியவா.

 

"உத்தரவு' என்றார் கவிஞர் கண்ணதாசன்.

 

கவிஞர், பெரியவா உத்தரவைக் காப்பாற்றினார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.