Breaking News :

Friday, October 11
.

மகா பெரியவாளும் காமாட்சி அம்மனும்!!


காஞ்சி மகா பெரியவா எப்போதும் காமாட்சி அம்மன் விகிரஹத்துக்கு

பூஜை அபிஷேகம் செய்வது வழக்கம் .

அவர் அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யும் பொது , அவரது பக்தர்களில் ஒருவரான தியாகராஜ பண்டிதர் , ஓரு வெள்ளை வேஷ்டியால் ஆன திரை ஒன்றை இருபுறமும் இழுத்து தூக்கி பிடித்துக்கொண்டு அலங்காரம் முடிந்து , தீபாராதனைக்கு தயாராகும் வரை நிற்பாராம் .

 

அவர் நல்ல 6 அடிக்கு மேல் உயரம் உள்ளவர் . பெரியவா அலங்கார முடிந்து மணி அடிக்கும் வரை திரையை பிடித்து கொண்டிருப்பாராம் . இவ்வாறு ஓரு முறை அவர் திரையை பிடித்து கொண்டிருக்கும் பொது , வெகு நேரம் ஆகியும் பெரியவா மணி அடிக்கவில்லையாம்.

 

வெகு நேரம் திரையை பிடித்துக்கொண்டிருந்ததால் ..அவர் கை லேசாக வலிக்க ஆரம்பித்ததாம் ..அந்த நொடி நேரத்தில் அவர் கை லேசாக தாழ ...நொடி நேரத்தில் அவர் கண்ட காட்சி , அவரை உரையவைத்ததாம் ..பெரியவா மடியில் ஒரு அழகான பெண் குழந்தை..தலை நிறைய பூ வைத்து..நெற்றி நிறைய பொட்டு வைத்து ..புத்தாடைகள் உடுத்து..அமர்திருந்ததாம் ..அலங்காரம் செய்து கொண்டிருந்த அம்பாள் சிலையை காணவில்லையாம் ..அதே நொடியில் பெரியவா கையில் ஜலத்தை எடுத்து பின்னோக்கி வீச ..பண்டிதர் முகத்தில் ஜலம் தெறிக்க அவர் விழித்து கொண்டு மீணடும் திரையை தூக்கி பிடிக்க ..எல்லாம் நொடிகளில் நடந்தது...பண்டிதருக்கு ஒன்றும் புரியவில்லை ..நான் கண்ட காட்சி என்ன ?? பெரியவா மடியில் இருந்த பெண் குழந்தை யார் ??

 

அம்பாள் விகிரஹம் எங்கே மறைந்தது ..அப்படியானால் நான் பார்த்தது ..தரிசனம் கண்டது..அம்பாளையா ..ஸ்ரீ காமட்சி அம்மனையா ?? ஒருபுறம் அடங்காத மகிழ்ச்சி ..மறுபுறம் மனக்குழப்பம் ...அதே நேரம் மணி ஒலிக்க ..திரையை விலக்கினார் பண்டிதர் .. அங்கே அம்பாளின் சிலைக்கு தீபம் கட்டி கொண்டிருந்தார் மஹாபெரியவா ..வந்திருந்த பக்தர்கள் யாவரும் வழிபட்டு மடங்கினர் ..பண்டிதருக்கு குழப்பம் தீரவில்லை..எப்படியாவது இன்று இரவு பெரியவாளிடம் கேட்டு குழப்பத்தை தீர்க்கவேண்டும் ..இன்று முடிவு செய்து..அன்று இரவு பெரியவா இளைப்பாறும் முன் சென்று ..பக்தி பணிவோடு..தன் குழப்பதை தெரிவித்தார் ..பெரியவா அமைதியாக ..ஆமாம் நீ கண்டது ஸ்ரீ காமட்சி அம்மனை தான் என்று கூறி..உனக்கு இன்று தரிசிக்கும் பாக்கியத்தை அம்பாள் கொடுத்திருக்கிறார் ..என்று சொல்லி ஆசீர்வதித்தாராம் ..மேலும் இதை வெளியே சொல்லவேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார்..இதை கேட்ட பண்டிதர் பூரித்துப்போனாராம் ..

என்ன ஓரு மஹாபெரியவா மகிமை..

என்ன பாக்கியம் பண்டிதருக்கு ...

 

ஹர ஹர சங்கர ..ஜெய ஜெய சங்கர

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.