Breaking News :

Monday, February 10
.

காதலும் காமமும் இன்றி காவியங்கள் இல்லை!


காமத்துப்பால் பகுதி 1 - காளகேய காவியத் தொடர்
    
புராணங்கள் எல்லாம் தேவர்கள் பற்றியும் அவர்கள் வாழ்வியலை பற்றியும் அறிந்து கொள்ள உதவுகின்றன . அசுரர்களை பற்றி அவர்கள் வாழ்வியலை பற்றி அவ்வளவாக நாம் தெரிந்து கொள்ள முடியவில்லை .

புராணங்களும் இதிகாசங்களிலும் அசுரர்களை அறிந்து கொள்ள சிறு சிறு கதைகளை மட்டும் நமக்கு தந்து உதவுகின்றன .

இந்த கதையின் தொடரில் அசுரர்களின் தோற்றம் அவர்களது வாழ்வியல் காதல் காமம் ஆகியவற்றை விவரித்து புதிய காவியமாக தர முயற்சி செய்துள்ளேன் .

சிறு வயதிலிருந்து நான் பார்த்து வியந்த விட்டலாச்சாரியா படங்களும் நான் படித்து வியந்த சாண்டில்யன் கதைகளும் என்னை இந்த தொடரை எழுத தூண்டினாலும் மகாபாரதத்தில் காளகேயர்களை பற்றிய சிறு குறிப்பு வேறெந்த புராணங்களிலும் அவர்களை பற்றி அறிய போதுமான தகவல்கள் இல்லை .

காளகேயர்களை பற்றிய தோற்றம் அவர்களது பெற்றோர் அவர்களின் வாழ்வியல் காதல் காமம் மற்றும் தேசங்கள் பற்றி ஓரளவிற்கு தெளிவாக தர வேண்டும் என்ற சிறு தீப்பொறி என்னுள் கிளம்பி ஜுவாலையாக மாறிய பின்பே காளகேய காவியத்தை உங்கள் முன்னால் படைத்து அரங்கேற்றுகின்றேன் .

கற்பனை கலந்து இருந்தாலும் இதில் கூறப்பட்டுள்ள பெயர்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே என்று கூறக் கடமைப்பட்டுள்ளேன் .

இனி கதைக்கு செல்வோம் ....

அமரர்களின் தலைநகரம் அமராவதிப் பட்டிணம் அன்றைய தினம் திருவிழாக் கோலம் பூண்டு அதகளப்பட்டு கொண்டு இருந்தது .

தேவர்களையும் கந்தர்வர்களையும் கிண்ணர கிம்புருட கிங்கரர்களை கட்டி ஆளும் இந்திரன் தேவேந்திரன் அரியணையில் ஏகபோகமாக வீற்றிருந்தான் .

தேவ சபையில் தேவர்களும் தேவகுரு பிரகஸ்பதியும் மற்றும் தவரிஷிகளும் தத்தமது ஆசனத்தில் அமர்ந்து இருந்து அவை நிகழ்ச்சிகளை காண ஆவலுடன் குழுமியிருந்தனர் .

தேவேந்திரனின் பட்டமகிஷி இந்திராணி முழு அலங்காரத்துடன் தன்னை அலங்கரித்து கொண்டு இந்திரனின் அருகில் அமர்ந்திருந்த போதும் இந்திராணியை ஏறெடுத்தும் பார்க்காமல் சாமரம் வீசும் பணிப்பெண்களின் மீது நாட்டம் கொண்டு நோட்டமிட்டு கொண்டு இருந்தான் அமரேந்திரன் .

காலாஞ்சனா .... இந்திராணியின் பணிப்பெண்களில் ஒருத்தி . இந்திராணியை விட இளமையாக மிக அழகாக பொலிவான தோற்றம் கொண்டவள் .

இந்திரனின் கடைக்கண் பார்வை அவ்வப்போது காலாஞ்சனாவின் கச்சை மீது பட்டு அவனது இதயத்தில் ஆயிரமாயிரம் அவஸ்தைகளை எழுப்பிய வண்ணமிருந்தது .

இந்திரனின் செய்கையை கண்டு காலாஞ்சனாவை முறைத்த இந்திராணி சாமரத்தை சரியாகவும் வேகமாகவும் வீசுமாறு கண்டித்தாள் .

நின்றபடி சாமரத்தை வீசிக்கொண்டு இருந்த காலாஞ்சனாவின் கைகளும் கால்களும் தளர்ந்து வலியெடுக்க ஆரம்பித்தது .

சபையில் சாமரம் வீசிக்கொண்டும் அந்தப்புரத்தில் இந்திராணிக்கு பணிவிடை செய்தும் தனது காலம் இப்படியே கடந்து விடுமோ என்று அஞ்சினாள் .

ஒரு பணிப்பெண்ணாக தேவலோக சுகபோக வாழ்வு தனக்கு அமைந்திருந்தாலும் விதியை மதியால் வென்று இந்த தேவலோகத்தை தனது கட்டுப்பாட்டிலும் ...

இந்திராணியை ஒரு நாளாவது தனக்கு சேவகம் செய்யும் பணிப்பெண்ணாக இருக்க வைக்க வேண்டும் என்று நினைத்து மகிழ்ந்தாள் .

இந்திரனையும் இந்திராணியையும் எப்படி பழி தீர்ப்பது என்றவாறே சாமரம் வீசிக்கொண்டு அவை நிகழ்ச்சிகளை காண ஆவல் கொண்டாள் .

எழுத்தாக்கம் : விக்கிரமாதித்தன் புருஷோத்பாபு

தொடரும் ....

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.