Breaking News :

Saturday, December 14
.

ஆம்பளைங்க வீட்ல கிரிக்கெட் பார்க்க முடியாது ஏன்?


கீழே ஓரு வீட்ல கணவன் மேட்ச் பார்க்கும் போது மனைவிக்கும், அவருக்கும் நடந்த உரையாடலை கேளுங்க.... இனி இந்த கேள்விய கேட்கவே மாட்டீங்க...... எப்போதுமே....

Wife: இது யாரு Bret Lee-ஆ?

Husband: இல்ல இல்ல... இவன் Chris Gayle. Bret Lee ஒரு பவுலர்.

Wife: Bret Lee ஸ்மார்ட்டா இருக்கான்.  அவங்க அண்ணன் மாதிரியே சினிமால நடிக்கலாம் இவனும்.....

Husband:   அடியே Bret Lee-க்கு சினிமால நடிக்கிற அண்ணன்லாம் யாரும் கிடையாதுடி...

Wife: அப்போ Bruce Lee யாரு?..

Husband: இல்ல இல்ல.... Bret Lee ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன்... ப்ரூஸ் லீ வேற நாடு...

Wife: அப்டியா..... இங்க பாருங்க.. அதுக்குள்ள இன்னொரு விக்கெட் விழுந்திடுச்சு... அச்சோ.

Husband: அடியே... இது ஆக்‌ஷன் ரீப்ளேடி... கடவுளே.....

Wife:  போற போக்கை பார்த்தா இந்தியா ஜெயிச்சிடும் போலயே....

Husband:  இது இந்தியா மேட்ச் இல்லம்மா.... டெல்லி - கொல்கத்தா

Wife: ஏங்க... ஏன் திடீர்னு அம்பயர் ஹெலிகாப்டர கூப்டுறாரு...

Husband: அடியே..... அது ஃப்ரீ ஹிட்டு டி....

Wife: ஓ... அப்போ மேட்ச் பாக்க வந்த யாருமே டிக்கெட் எடுக்கலியா?....

Husband: ????

Wife: இப்போ அம்பயர் ஏன் 'ஹாய்' சொல்றாரு?...

Husband: ஹாய் சொல்லல.... 'பை’-ன்னு சிக்னல் காட்றார்....

Wife: ஓ.... அப்போ மேட்ச் முடிஞ்சிடுச்சா...

Husband: 👹👹👹👹?

Wife: எத்தனை ரன் எடுக்கணும் ஜெயிக்க?...

Husband: 72 in 36 balls....

Wife: ப்பூ... இவ்ளோ தானா.... ஒரு பந்துக்கு ரெண்டு ரன்... ஈசியா அடிச்சிடலாம்...

இப்போ புருசன் டிவியை ஆஃப் பண்ணட்டான்... பொறுக்க முடியாம!..

இப்போ மனைவி டிவியை ஆன் பண்ணி சீரியல் பாக்க ஆரம்பிக்கிறாங்க...

அதில ஒரு கேரக்டர் பேரு ஆனந்தி... இப்போ கணவன் கேட்கிறான்....

Husband: அதாரு ஆனந்தி?...

Wife:   எத்தனை தடவை சொல்லியருக்கேன்....

நான் டிவி பாக்கும் போது தொந்தரவு பண்ணாதீங்கன்னு... கம்முனு வாய மூடிட்டு பாருங்க.... சரியா....

Husband: 😳😳😳

இப்போ புரிஞ்சிருக்குமே..... அந்த கணவனோட நிலைமை...

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.