Breaking News :

Monday, January 13
.

வாழ்க்கை நலமாக இத செய்யாதீங்க!


1) உங்களுடன் ஒரே வீட்டில் உங்கள் மகனையும் அவரது மனைவியையும் குடி வைக்க வேண்டாம்.
ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனி குடித்தனம் வைப்பது சிறந்தது. தனி வீடு கிடைப்பது அவர்களின் பிரச்சனை. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளின் குடும்பங்களுக்கும் இடையே அதிக தூரம் இருந்தால், உங்கள் உறவு சிறப்பாக இருக்கும்.

2) உங்கள் மகனின் மனைவியை அவருக்கு மனைவியாகவே நடத்துங்கள், உங்கள் சொந்த மகளாக அல்ல.

ஒருவேளை அவளை ஒரு தோழியாக நடத்தலாம். உங்கள் மகன் எப்பொழுதும் உங்கள் மகனாகவே இருப்பான். ஆனால், அவனுடைய மனைவி அதே மனநிலையில் இருப்பதாக நினைத்து அவளை எப்போதாவது திட்டினால், அவள் அதை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பாள். நிஜ வாழ்க்கையில், அவளுடைய சொந்த தாய் மட்டுமே அவளைக் கண்டிக்கவோ அல்லது திருத்தவோ தகுதியானவராகக் கருதுவார்கள், நீங்கள் அல்ல.

3) உங்கள் மருமகளின் பழக்க வழக்கங்கள் அல்லது குணங்கள் உங்கள் பிரச்சனை அல்ல. உங்கள் மருமகளின் குணங்கள் உங்கள் மகனின் பிரச்சனை. அவர் பக்குவத்திற்கு அவற்றை சரி செய்ய வேண்டும் என்பதால் இது உங்கள் பிரச்சினை அல்ல. நீங்கள் சரி செய்ய முயற்சிக்காதீர்கள். அது உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் பிளவை ஏற்படுத்தி விடும்.

4) ஒன்றாக வாழும் போது கூட, உங்கள் எல்லைகளை தெளிவாக வைத்திருங்கள்.
அவர்களின் துணியை நீங்கள் துவைக்க வேண்டாம், அவர்களுக்கு சமைக்க வேண்டாம், அவர்களின் குழந்தைகளுக்கு அன்பை கொடுங்கள். அவர்களை பராமரிக்க முயற்சிக்க வேண்டாம். மிக முக்கியமாக, உங்கள் மகனின் குடும்ப பிரச்சனைகளைப் பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம். அவர்களின் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும்.

5) உங்கள் மகனும் அவனது மனைவியும் சண்டையிடும் போது பார்வையற்றவராகவும், காது கேளாதவராகவும் நடிக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

6) உங்கள் மருமகள் உங்களுக்கு மரியாதை மற்றும் சேவை செய்ய வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் மகனின் கடமை. உங்கள் மருமகளுடனான உங்கள் உறவு சிறப்பாக இருக்க, உங்கள் மகனுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் உள்ள உறவை பார்த்து உங்கள் மருமகள் உங்களுக்கான மரியாதையை செய்ய வேண்டும்.

7) உங்கள் ஓய்வு காலத்திற்கு சரியாக திட்டமிடுங்கள். உங்கள் ஓய்வு காலத்தில் உங்களைக் கவனித்துக் கொள்வதற்கு உங்கள் பிள்ளைகளை நம்பி இருக்காதீர்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் பெரும்பகுதியை நீங்கள் ஏற்கனவே உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டிர்கள். ஓய்வு காலத்திற்கு உங்கள் சேமிப்பு, பயணங்கள், உடல் நிலை மிக முக்கியம்.

உங்கள் ஓய்வூதிய ஆண்டுகளை அனுபவிக்கவும்.
நீங்கள் இறப்பதற்கு முன் சேமித்த அனைத்தையும் பயன்படுத்தி மகிழுங்கள். உங்கள் பணமும், அனுபவமும் உங்களுக்கு பிரயோஜன பட வேண்டும்.

இவைகளை சரியாக கடைபிடித்தால் உங்கள் வாழ்க்கை 100% நலமாக, ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.