Breaking News :

Sunday, April 28
.

புத்தகம்: பாரதி நினைவுகள்


யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள்

கோதை பதிப்பகம்

இந்நூல் ராஜாமகள் ,ஷாஜஹான் சார் இவர்கள் சொல்லி ராஜாமகள் பதிப்பகமான கோதை பதிப்பகத்தில் வாங்கியது!

இவர்களுக்கு நன்றிகள்!

பாரதியாரை புரட்சிக்கவியாக,தேசியக்கவியாக,வர கவியாக,மாட மாளிகைகளில் உறங்கி. கிடந்த தமிழை தட்டி எழுப்பி,வீதிகளில் விளையாட விட்ட கவியாக நமக்கு தெரியும்
ஆனால் அவரொடு பழகி,அவரிடம் பேசி பழகி , சிறுமியாக நாட்களை களித்த 
யதுகிரி அம்மாள் பாரதியாரைப்பற்றி துணைவியான செல்லம்மாள்,மகள்கள் தங்கம்மாள்,சகுந்தலா பற்றி எழுதியுள்ள அனுபவங்களைப்படிப்பது நாம் செய்த புண்ணியம்!
சுதேசமித்திரன் ஆசிரியராகப் பணி புரிந்து சென்னை யில் வசித்து வந்த பாரதியார்
தன் ஆவேசம் மிகுந்த எழுத்துகளால் கைது செய்யப்படும் நிலை வந்தபோது குடும்பத்துடன் புதுச்சேரி தப்பித்து சென்றுவிட்டார்.அவரை தொடர்ந்து ஆசிரியரின் தந்தையார் மண்டயம் ஶ்ரீநிவாசாச்சாரியார் அவர்களும் குடும்பத்துடன் பிரெஞ்ச் ஆதிக்கத்தில் உள்ள புதுச்சேரிக்கு  பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து,கைதாவதிலிருந்து ,தப்பிக்க வந்து சேர்ந்தனர்!அப்போது இரண்டு குடும்பமும் தினந்தோறும் கடற்கரைக்கு செல்வது நடை பயிற்ச்சி மேற்கொள்ளல் ,ஒருவர் வீட்டுக்கு ஒருவர்செல்லல் என அன்றாட்நிகழ்ச்சிகள்
பாரதியாருடன் மகளாக பழகிய ஆசிரியை
பாரதியாரின் பாடல்கள் தோன்றிய தருணங்கள்,அவை அச்சில் ஏறு முன்பாகவே
யதுகிரி அம்மாள் படித்தல் என பல சுவாரசியமான நிகழ்வுகள்!
பாரதியாரின் துணிவு,பெண்களுன் முன்னேற்றத்தை விரும்பியதுமூட நம்பிக்கைகளை வெறுத்தது என அவரது கொள்கைகள்!இயற்கையோடு இணைந்து
மெய்மறந்து பாடுதல் என பல அனுபவங்கள்
படிக்கவும் பாரதியாரைப் பற்றி அறிய!!!


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.