Breaking News :

Thursday, April 25
.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் படைப்புகள் எது?


எஸ். ராமகிருஷ்ணன் (ச. இராமகிருட்டினன்) (1966) 
என்பவர் தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார்
இவரது முதல் கதையான "பழைய தண்டவாளம்" கணையாழியில் வெளியாகியிருக்கிறது. 
1984இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துக்கள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல்வடிவம் பெற்றுள்ளன
இவரது சிறுகதைகள் ஆங்கிலம், இடாய்ச்சு, பிரான்சியம், கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
"அட்சரம்" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்
இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ். ராமகிருஷ்ணன்" என்று ஜெயமோகனும், "ஜெயகாந்தன் போல... எஸ். ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம்" என்று மனுஷ்யபுத்திரனும் குறிப்பிட்டுள்ளனர் புத்தாயிரத்தின் இலக்கியம் - இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்கு பற்றி மதிப்பிடுகையில் ந. முருகேச பாண்டியன் "எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது" என்று கருத்துரைத்துள்ளார்..
தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது 2001
ஈரோடு சிகேகே அறக்கட்டளை வழங்கிய சிகேகே இலக்கிய விருது 2008
கோவை கண்ணதாசன் கழகம் வழங்கிய இலக்கிய விருது 2011 
சாகித்ய அகாதமி விருது (சஞ்சாரம் நாவல்)

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் புதினத்துக்கு இவர் எழுதிய விமர்சனக் கட்டுரை பரவலான கண்டனத்தோடும், ஒருவித வியப்போடும் எதிர்கொள்ளப்பட்டது பொருள் மயக்கம் தரும் கவனமற்ற உரைநடை, சலிப்பூட்டும் சொல்லாட்சி, இலக்கணப் பிழைகள் உள்ளிட்டவற்றுக்காக இவரது சில ஆக்கங்கள் விமர்சிக்கப்பட்டதுண்டு சண்டக்கோழி படத்தில் இவர் எழுதியதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய ஒரு வசனத்தால் பெண் படைப்பாளிகளின் கண்டனத்துக்கு ஆளானார்

படைப்புகளின் பட்டியல்
புதினங்கள்
உப பாண்டவம்(2000)
நெடுங்குருதி(2003)
உறுபசி(2005)
யாமம்(2007)
துயில்(2010)
நிமித்தம்(2013)
சஞ்சாரம்(2014) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் )
இடக்கை(2016)
பதின்(2017)
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை(2019)
 
சிறுகதைத் தொகுப்புகள்
வெளியில் ஒருவன், சென்னை புக்ஸ்
காட்டின் உருவம், அன்னம்
எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் பாகம் 1,2மற்றும் 3 (2014)
நடந்துசெல்லும் நீரூற்று(2006)
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை(2008)
அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது(2010)
நகுலன் வீட்டில் யாருமில்லை(2009)
புத்தனாவது சுலபம்(2011)
தாவரங்களின் உரையாடல்(2007)
வெயிலை கொண்டு வாருங்கள்(2001)
பால்ய நதி(2003)
மழைமான்(2012)
குதிரைகள் பேச மறுக்கின்றன(2013)
காந்தியோடு பேசுவேன்(2013)
என்ன சொல்கிறாய் சுடரே(2015)
கட்டுரைத் தொகுப்புகள்
விழித்திருப்பவனின் இரவு(2005)
இலைகளை வியக்கும் மரம்(2007)
என்றார் போர்ஹே(2009)
கதாவிலாசம்(2005)
தேசாந்திரி(2006)
கேள்விக்குறி(2007)
துணையெழுத்து(2004)
ஆதலினால்(2008)
வாக்கியங்களின் சாலை(2002)
சித்திரங்களின் விசித்திரங்கள்(2008)
நம் காலத்து நாவல்கள்(2008)
காற்றில் யாரோ நடக்கிறார்கள்(2008)
கோடுகள் இல்லாத வரைபடம் - உலகம் சுற்றிய பயணிகளைப் பற்றிய கட்டுரைகள்
மலைகள் சப்தமிடுவதில்லை(2009)
வாசகபர்வம்(2009)
சிறிது வெளிச்சம்(2010)
காண் என்றது இயற்கை(2010)
செகாவின்மீது பனி பெய்கிறது(2010)
குறத்தி முடுக்கின் கனவுகள்(2010)
என்றும் சுஜாதா(2011)
கலிலியோ மண்டியிடவில்லை(2011)
சாப்ளினுடன் பேசுங்கள்(2011)
கூழாங்கற்கள் பாடுகின்றன(2011)
எனதருமை டால்ஸ்டாய்(2011)
ரயிலேறிய கிராமம்(2012)
ஆயிரம் வண்ணங்கள்(2016)
பிகாசோவின் கோடுகள்(2012)
இலக்கற்ற பயணி(2013)

திரைப்படம் குறித்த நூல்கள்
பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்(2006)
அயல் சினிமா(2007)
உலக சினிமா(2008)
பேசத்தெரிந்த நிழல்கள்(2009)
சாப்ளினோடு பேசுங்கள்(2011)
இருள் இனிது ஒளி இனிது(2014)
பறவைக் கோணம்(2012)
சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்(2013)
நான்காவது சினிமா(2014)
குற்றத்தின் கண்கள்(2016)
காட்சிகளுக்கு அப்பால்(2017)

===குழந்தைகள் நூல்கள்===
ஏழு தலைநகரம் கதை
கள்(2005)
கிறு கிறு வானம்(2006)
கால் முளைத்த கதைகள்(2006)
நீள நாக்கு(2011)
பம்பழாபம்(2011)
எழுத தெரிந்த புலி(2011)
காசு கள்ளன்(2011)
தலையில்லாத பைய்யன்(2011)
எனக்கு ஏன் கனவு வருது(2011)
வானம்
லாலிபாலே
நீளநாக்கு
லாலீப்பலே(2011)
அக்காடா(2013)
சிரிக்கும் வகுப்பறை(2013)
வெள்ளை ராணி(2014)
அண்டசராசம்(2014)
சாக்கிரடீஸின் சிவப்பு நூலகம்(2014)
கார்ப்பனை குதிரை(2014)
படிக்க் தெரிந்த சிங்கம்(2016)
மீசை இல்லாத ஆப்பிள்(2016)
பூனையின் மனைவி(2016)
இறக்கை விரிக்கும் மரம்(2016)
உலகின் மிகச்சிறிய தவளை(2016)
எலியின் பாஸ்வோர்ட்(2017)
உலக இலக்கியப் பேருரைகள்
ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்(2013)
ஹோமரின் இலியட்(2013)
ஷேக்ஸ்பியரின் மெக்பெத்(2013)
ஹெமிங்வேயின் கடலும் கிழவனும்(2013)
தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்(2013)
லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா(2013)
பாஷோவின் ஜென் கவிதைகள்(2013)

வரலாறு
எனது இந்தியா
மறைக்கப்பட்ட இந்தியா

நாடகத் தொகுப்புகள்
அரவான்(2006)
சிந்துபாத்தின் மனைவி(2013)
சூரியனை சுற்றும் பூமி(2013)
நேர்காணல் தொகுப்புகள்
எப்போதுமிருக்கும் கதை
பேசிக்கடந்த தூரம்
மொழிபெயர்ப்புகள்
நம்பிக்கையின் பரிமாணங்கள்(1994)
ஆலீஸின் அற்புத உலகம்(1993)
பயணப்படாத பாதைகள்(2003)
தொகை நூல்கள்
அதே இரவு, அதே வரிகள், (அட்சரம் இதழ்களின் தொகுப்பு)
வானெங்கும் பறவைகள்

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள நூல்கள்
Nothing but water
Whirling swirling sky

பணியாற்றிய திரைப்படங்கள்
சண்டைக்கோழி
பாகுபலி
ஆல்பம்
பாபா
தாம்தூம்
பீமா
உன்னாலே உன்னாலே
கர்ண மோட்சம்
மோதி விளையாடு
சிக்கு புக்கு
அவன் இவன்
யுவன் யுவதி

பணியாற்றிய குறும்படங்கள்
கர்ண மோட்சம்(2012)
தாராமணியில் காரப்பன் பூச்சிகள்(2012)
மற்றவள்(2014)
கொக்கரக்கோ(2014)
வீட்டுக்கணக்கு(2014)
பிடாறன்(2014)
வாழ்க்கை(2014)
திங்கள்(2015)
ஒரு கோப்பை தண்ணீர்(2015)
இரு குமிழிகள்(2015)
கிளீன் போல்ட்(2016)


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.