Breaking News :

Friday, April 19
.

எழுத்தாளர் ஜெயமோகன் பற்றி..


தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.
 மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார்.
 இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும். 

இவர் தன்னை "இந்தியத் தமிழ் மரபை நவீன காலகட்டத்தின் அறத்திற்கு ஏற்ப மறுவரையறை செய்தவர் ஜெயமோகன்" என அறியப்பட வேண்டும் என விரும்பினார்.

அம்மா விசாலாட்சி அவர்களுக்கு தன்னை எழுத்தாளன் ஆக்கிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்கிறார் ஜெயமோகன், இலக்கிய வாசகியான அவர் மூலம் வாசிப்பு ஆர்வம் வந்தது, 12 வயது முதலே ரத்னபாலா போன்ற பத்திரிக்கைகளில் எழுத துவங்கினார்.

 இவருக்கு 1985ல் எழுத்தாளர் சுந்தர ராமசாமி அறிமுகமானார் அதன்மூலம் இவரை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார்
’கைதி’ என்ற கவிதை 1987ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த கொல்லிப்பாவை இதழில் வெளியாயிற்று.

 1987 ல் கணையாழியில் நதி அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் படுகை, போதி முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன
1988ல் எழுதிய ரப்பர் என்னும் புதினத்தை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். 

தாகம் என்னும் தலைப்பில் தமிழ் புத்தகாலயம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
ஜெயமோகனின் வாசகர்கள் இணைந்து விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் இலக்கிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். 

2010 முதல் ஆண்டுதோறும் சிறந்த மூத்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது இவ்வமைப்பு. 

படங்கள் வரிசை
கஸ்தூரிமான் தமிழ் 2005
நான் கடவுள் தமிழ் 2008
அங்காடித்தெரு தமிழ் 2010
நீர்ப்பறவை தமிழ் 2012
ஒழிமுறி மலையாளம் 2012
கடல் தமிழ் 2013
ஆறு மெழுகுவர்த்திகள் தமிழ் 2013
காஞ்சி மலையாளம் 2013
காவியத்தலைவன் தமிழ் 2014
நாக்குபெண்டா நாக்கு டாக்கு மலையாளம் 2014
ஒன் பை டூ மலையாளம் 2014
பாபநாசம் தமிழ் 2015
சர்க்கார் தமிழ்
எந்திரன் 2.0 தமிழ்
இந்தியன் .2. தயாரிப்பில்

விருதுகள்
1990 ஆண்டு அகிலன் நினைவுப்போட்டிப் பரிசைப் பெற்றார்.
1992 ஆம் ஆண்டுக்கான கதா[6] விருதைப் பெற்றார்.
1994 ஆம் ஆண்டுக்கான சம்ஸ்கிருதி சம்மான் தேசியவிருது பெற்றுள்ளார்.
2008 ஆம் ஆண்டு பாவலர் விருது பெற்றார்
2010 ஆம் ஆண்டு முதல் இவரது படைப்பான விஷ்ணுபுரம் பெயரால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது ஒன்றை அளிக்கிறது.
2011 ஆம் ஆண்டு அறம் சிறுகதைத் தொகுதிக்காக முகம் விருது பெற்றார்
2012 சிறந்ததிரைக்கதைக்கான கேரளா ஃபிலிம் கிரிட்டிக்ஸ் விருது ஒழிமுறி
2012- சிறந்த திரைக்கதைக்கான டீ ஏ ஷாஹித் விருது ஒழிமுறி
2014- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது

புதினங்கள்
ரப்பர்
விஷ்ணுபுரம்(கவிதா பதிப்பகம்)
பின் தொடரும் நிழலின் குரல் (தமிழினி பதிப்பகம்)
பனிமனிதன் - சிறுவர் புதினம்
கன்னியாகுமரி
கொற்றவை (புதினம்) (தமிழினி பதிப்பகம்)
காடு
ஏழாம் உலகம்
அனல்காற்று
இரவு
உலோகம்
கன்னிநிலம்
வெள்ளையானை

மகாபாரதத்தின் தமிழ் நாவல் வடிவம் வெண்முரசு
முதற்கனல் - வெண்முரசு நாவல் வரிசை, முதல் புதினம்.
மழைப்பாடல் - வெண்முரசு நாவல் வரிசை, இரண்டாம் புதினம்.
வண்ணக்கடல் - வெண்முரசு நாவல் வரிசை, மூன்றாம் புதினம்.
நீலம் - வெண்முரசு நாவல் வரிசை. நான்காம் புதினம்.
பிரயாகை - வெண்முரசு நாவல் வரிசை. ஐந்தாம் புதினம்.
வெண்முகில் நகரம் - வெண்முரசு நாவல் வரிசை, ஆறாம் புதினம்.
இந்திரநீலம் - வெண்முரசு நாவல் வரிசை, ஏழாம் புதினம்.
காண்டீபம் - வெண்முரசு நாவல் வரிசை, எட்டாம் புதினம்.
வெய்யோன் - வெண்முரசு நாவல் வரிசை, ஒன்பதாம் புதினம்.
பன்னிரு படைக்களம் - வெண்முரசு நாவல் வரிசை, பத்தாம் புதினம்.
சொல்வளர்காடு - வெண்முரசு நாவல் வரிசை, பதினொன்றாம் புதினம்.
கிராதம் - வெண்முரசு நாவல் வரிசை, பன்னிரண்டாம் புதினம்.
மாமலர் - வெண்முரசு நாவல் வரிசை, பதின்மூன்றாம் புதினம்.
நீர்க்கோலம் - வெண்முரசு நாவல் வரிசை, பதினாங்காம் புதினம்.
எழுதழல் - வெண்முரசு நாவல் வரிசை, பதினைந்தாம் புதினம்.
குருதிச்சாரல் - வெண்முரசு நாவல் வரிசை, பதினாறாம் புதினம்.
இமைக்கணம் - வெண்முரசு நாவல் வரிசை, பதினேழாம் புதினம்.
செந்நா வேங்கை - வெண்முரசு நாவல் வரிசை, பதினெட்டாம் புதினம்.
திசைதேர் வெள்ளம் - வெண்முரசு நாவல் வரிசை, பத்தொன்பதாம் புதினம்.
கார்கடல் - வெண்முரசு நாவல் வரிசை, இருபதாம் புதினம்.
இருட்கனி - வெண்முரசு நாவல் வரிசை, இருபத்தொன்றாம் புதினம்.
தீயின் எடை - வெண்முரசு நாவல் வரிசை, இருபத்து இரண்டாம் புதினம்.
நீர்க்கோலம் - வெண்முரசு நாவல் வரிசை, இருபத்து மூன்றாம் புதினம்.
களிற்றியானைநிரை - வெண்முரசு நாவல் வரிசை, இருபத்து நான்காம் புதினம்.
கல்பொருசிறுநுரை - வெண்முரசு நாவல் வரிசை, இருபத்து ஐந்தாம் புதினம்.
முதலாவிண் - வெண்முரசு நாவல் வரிசை, இருபத்து ஆறாம் புதினம்.

சிறுகதை நூல்கள்
மண் (கவிதா பதிப்பகம்)
ஆயிரங்கால் மண்டபம் (கவிதா பதிப்பகம்)
திசைகளின் நடுவே (கவிதா பதிப்பகம்)
கூந்தல்(கவிதா பதிப்பகம்)
ஜெயமோகன் சிறுகதைகள் (கிழக்கு பதிப்பகம்)
ஜெயமோகன் குறுநாவல்கள் (கிழக்கு பதிப்பகம்)
பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும்(நிழல்வெளிக்கதைகள்) (நவீனத் திகில்கதைகள்) (கிழக்கு பதிப்பகம்)
ஊமைச்செந்நாய்" (உயிர்மை பதிப்பகம்)
”அறம்” [சிறுகதைகள்] (வம்சி பதிப்பகம்)
வெண்கடல் [வம்சி பதிப்பகம்]
ஈராறுகால்கொண்டெழும்புரவி [சொல்புதிது பதிப்பகம்]
அறிவியல் சிறுகதைகள்
விசும்பு (அறிவியல் சிறுகதைகள்)(கிழக்கு பதிப்பகம்)
அரசியல்
சாட்சிமொழி (உயிர்மை பதிப்பகம்)
இன்றைய காந்தி (காந்திய விவாதங்கள்)(தமிழினி பதிப்பகம்)
அண்ணா ஹசாரே -ஊழலுக்கு எதிரான போராட்டம் (கிழக்கு பதிப்பகம்)

வாழ்க்கை வரலாறு
முன்சுவடுகள் (உயிர்மை பதிப்பகம்)
கமண்டலநதி நாஞ்சில் நாடன் (தமிழினி பதிப்பகம்)
கடைத்தெருவின் கலைஞன் ஆ. மாதவன் (தமிழினி பதிப்பகம்)
நினைவின் நதியில் (சுந்தர ராமசாமி பற்றி) (உயிர்மை பதிப்பகம்)
பூக்கும் கருவேலம் [பூமணியின் படைப்புலகம்] தமிழினி பதிப்பகம்
லோகி [ஏ கே லோகிததாஸ் நினைவு [உயிர்மை பதிப்பகம்]
இவர்கள் இருந்தார்கள் [நற்றிணைப்பதிப்பகம்]
ஒளியாலானது [தேவதேவன் படைப்புலகம்]
காப்பியம்
கொற்றவை (காப்பியம்) (தமிழினி பதிப்பகம்)
நாடகம்
வடக்குமுகம் (நாடகங்கள்) (தமிழினி பதிப்பகம்)
வரலாறு
கொடுங்கோளூர் கண்ணகி (வரலாற்றுநூல், மொழியாக்கம்) (தமிழினி பதிப்பகம்)
இலக்கியத் திறனாய்வு
இலக்கிய முன்னோடிகள் (ஏழு இலக்கிய விமரிசன நூல்கள்) 
முதற்சுவடு,
கனவுகள் இலட்சியங்கள்,
சென்றதும் நின்றதும்,
மண்ணும் மரபும்,
அமர்தல் அலைதல்,
நவீனத்துவத்தின் முகங்கள்,
கரிப்பும் சிரிப்பும்
உள்ளுணர்வின் தடத்தில்... (கவிதை விமரிசனம்)
நாவல் (விமரிசனம்)
நவீனத்துவத்திற்குப் பின் தமிழ் கவிதை -தேவதேவனை முன்வைத்து
ஆழ்நதியைத்தேடி (இலக்கிய விவாதம்)
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் 
இலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்கள்) 
ஈழ இலக்கியம் ஒரு விமரிசனப்பார்வை,
புதிய காலம் -இலக்கிய விமரிசனம், 
மேற்குச் சாளரம் மேலை இலக்கிய அறிமுகம், 
எழுதும் கலை - இலக்கிய எழுத்துக்கு அறிமுகம் 
கண்ணீரைப் பின் தொடர்தல்-இருபத்திரண்டு இந்திய நாவல்கள் குறித்த அறிமுகம். 
இலக்கிய முன்னோடிகள் 
பழந்தமிழ் இலக்கியம்
சங்க சித்திரங்கள் (பண்டை இலக்கியம்)
மொழியாக்கம்
தற்கால மலையாளக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு)
இன்றைய மலையாளக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு)
சமீபத்திய மலையாளக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு)
அனுபவம்
வாழ்விலே ஒருமுறை (அனுபவக் கட்டுரைகள்) 
இன்றுபெற்றவை (நாட்குறிப்புகள்)
புல்வெளிதேசம் (பயணக்கட்டுரை)
நிகழ்தல் (அனுபவக்குறிப்புகள்)
நாளும்பொழுதும் அனுபவக்குறிப்புகள் 
முகங்களின் தேசம் (பயணக்கட்டுரை)
தத்துவமும் ஆன்மீகமும்
சிலுவையின் பெயரால் (ஆன்மீகம்) 
இந்தியஞானம் (ஆன்மீகம்) 
இந்துஞான மரபில் ஆறுதரிசனங்கள் (தத்துவம்) 
இந்துமதம் சில விவாதங்கள் [சொல்புதிது]
பண்பாடு
எதிர்முகம் (இணையவிவாதங்கள்) தமிழினி பதிப்பகம்
பண்படுதல் (பண்பாட்டுக்கட்டுரைகள்) உயிர்மைபதிப்பகம்
தன்னுரைகள் (மேடை உரைகள்) உயிர்மைப்பதிப்பகம்
எழுதியனைக் கண்டுபிடித்தல் [இலக்கிய உரையாடல்கள்]
பொன்னிறப்பாதை 
விதிசமைப்பவர்கள் 
ஆகவேகொலைபுரிக 
பொது
நலம் (உடல்நலக்கட்டுரைகள்)


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.