மனைவிகளின் கோபம்?

husband-wife-relationship
மனைவிகளின் கோபம்?

கணவனின் வேலைக்கு தகுந்த மனைவிகளின் கோபம்:

 

பைலட் மனைவி:

ரொம்ப ஒசரத்தில பறக்கிறதா நெனப்போ..

 

வாத்தியாரின் மனைவி:

எந்தலையெழுத்து ஒங்களுக்கு பாடம் எடுத்தே நான் ஓய்ஞ்சி போயிட்டேன்..

 

நடிகனின் மனைவி:

ஒங்க நடிப்பையெல்லாம் வேற யார்கிட்டயாவது காமிங்க எங்கிட்ட வேண்டாம்...

 

EB கணவனின் மனைவி:

ரொம்ப பண்ணுனீங்க அப்புறம் பீஸ புடுங்கி விட்ருவேன் ஆமா ...

 

ஆடிட்டர் மனைவி:

எல்லாம் ஞாபகம் வச்சிருக்கேன் ஒருநாள் ஒன்னோட கணக்க தீக்குறனா இல்லையா பார்...

 

டிசைனரின் மனைவி:

மூஞ்சில எம் பீச்சாங்கைய வெச்சேன்னு வையி மூஞ்சி ஷேப்பு மாறிடும் ஆமா..

 

வெட்னரி டாக்டரின் மனைவி:

மாடு மாறி மசமசனு நிக்காம போயி வேலய பாருங்க ...

 

எஞ்சினியர் மனைவி:

எல்லா பார்ட்ஸ்சையும் உறுவிப்புடுவேன் உறுவி ஆமா ...

 

பல் டாக்டர் மனைவி:

ஒண்ணு விட்டேன் வையி பல்லு பூராம் தெறிச்சிபுடும் ஆமா...

 

போலிஸ்காரரின் மனைவி:

ரெண்டு போட்டேன்னு வையி எலும்பு ஓடஞ்சி மூலையில தான் கெடக்கணும் ...

 

வக்கீலின் மனைவி:

இந்த பாரு உன்னோட புளுகு மூட்டையெல்லாம் கோர்ட்டுல வெச்சிக்க எங்கிட்ட வேண்டாம் ...

 

வேலை இல்லாதவனின் மனைவி:

சும்மா வடிச்சி வடிச்சி கொட்ட முடியாது எங்கயாவது போயி ரோடு மேய வேண்டியது தான...