உன் சிரிப்பில் என் இதயம்
உன் சிரிப்பில் சிக்கிய என் சின்ன இதயம் சிறகடித்து பறக்கிறது ...
சிந்தனை முழுதும் உன் நினைவுகள்
இந்த உலகத்தையே மறக்கடிக்கிறது ...
அந்த வெட்கச் சிரிப்பிற்கு இந்த பூமியின் விலை போதுமா உன்னை மொத்தம் ரசிப்பதற்கு இந்த ஜென்மம் தான் தீருமா ?
அழகிய பாவையே எப்போதும் என் மேல் வேண்டும் உன் விலகாத பார்வையே ...
உலகத்து ஏழு அதிசயங்களில் எட்டாவது அதிசயம் நீ ...
உன்னை எட்டிப் பிடிப்பதின் ரகசியம் என்னிடம்
சொல்வாயா நீ ...
காத்திருக்கிறேன் காதலுடன் காற்றைப் போல் எப்போதும் இருப்பேன் உன்னுடன் !!!