புத்தகம் என்பது வேறொன்றுமில்லை பெண்

the-book-is-nothing-else-girl
The book is nothing else Girl

புத்தகம் என்பது வேறொன்றுமில்லை
பெண்

வாசிக்கத் தெரியாதவர்கள் 
தயவு செய்து அதை
வாங்காதீர்கள் 

எழுதியவனிடமே 
இருந்துவிட்டுப் போகட்டும்

புத்தகம் பற்றிய புரிதல் 
இல்லாதவர்கள் 
அதைப்போட்டு புரட்ட வேண்டாம் 

கோபத்தில் கிழிக்காதீர்கள் 
குப்பையில் எறியாதீர்கள் 
எழுதியவன் அழுவான் 

வாங்குமுன் யோசியுங்கள்
ஆசையாய் வாங்கி
அனாதையாய் தூக்கிப்போடாதீர்கள்

காகிதம் தானேயென 
கசக்காதீர்கள்

புத்தகம் என்பது வேறொன்றுமில்லை
பெண்.

கவி செல்வ ராணி திருச்சி.

Tags