கொஞ்சம் சிரிங்க ப்ளீஸ்!

konjam-siringa-please-jokes
கொஞ்சம் சிரிங்க ப்ளீஸ்!

கோபாலுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை நல்லறமாக இல்லறம் கழிந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டது

இப்ப மனைவிக்கு லேசா சந்தேகம் அந்த குழந்தை நம்ம குழந்தை மாதிரி இல்லைன்னு

டி என் ஏ டெஸ்ட் வச்சி பாத்தாங்க ஆமா உண்மைதான் அது வேறு பெற்றோரின் பிள்ளை

மனசு உடைஞ்சு போய் அன்னைக்கு இரவு கோபால்கிட்ட அவுங்க மனைவி சொன்னாங்க
என்னங்க இந்த பிள்ளை நம்ம பிள்ளை இல்லை

டிவிட்டர்ல இருந்த கோபாலு அசால்டா சொன்னாரு ஆமா நம்ம பிள்ளை இல்லைன்னு

அடப்பாவி மனுசா அப்ப எங்கய்யா நம்ம பிள்ளை என கேட்டதுக்கு கோபாலு சொன்னாரு
மீனா உனக்கு ஞாபகம் இருக்கா நமக்கு குழந்தை பிறந்து ஹாஸ்பிட்டலை விட்டு டிஸ்சார்ஜ் ஆகும் போது நம்ம புள்ள டயாபரிலே ஆய் போய்ட்டான்

நீ என்ன சொன்ன என்கிட்ட புள்ளையக் கொடுத்து போங்க சீக்கிரமா இதை மாத்திட்டு வாங்கன்னு சொன்னே

அதான் நான் அந்த ஆய் பிள்ளையைத் தூக்கிப் போட்டுட்டு வேற நல்ல பிள்ளையா எடுத்துட்டு வந்தேன் 

கதை நீதி:
யாருகிட்ட எந்த வேலையைக் கொடுக்கனுமோ அவுங்க கிட்டத்தான் அந்த வேலையைக் கொடுக்கனும்.