அழகு கவிதை
ஆணுக்கு ஆண்மை அழகு!
பெண்ணுக்கு பேறுகாலம் அழகு!
குழந்தைக்கு குறும்புதனம் அழகு!
மண்ணுக்கு மரங்கள் அழகு!
விண்ணுக்கு விண்மீன் அழகு!
மனிதனுக்கு குணம் அழகு!
மாணவனுக்கு மதிப்பெண் அழகு!
அசானுக்கு அறிவு அழகு!
அறிவுக்கு அறிவியல் அழகு!
அறிவாளிக்கு ஆற்றல் அழகு!
கண்ணுக்கு கருவிழி அழகு!
காகத்திற்கு கருமை அழகு!
கடலுக்கு அலை அழகு!
கடல் கரைக்கு கலங்கரை விளக்கம் அழகு!
மயிலுக்குத் தோகை அழகு!
மானுக்கு புள்ளி அழகு!
புள்ளிக்கு கோலம் அழகு!
கோவிலுக்கு குளம் அழகு!
குளத்துக்கு தண்ணி அழகு!
தண்ணிக்கு தாமரை அழகு?
பூவுக்கு தேன் அழகு!
தேனுக்கு வண்ணத்துப்பூச்சி அழகு!
வண்ணத்துப்பூச்சிக்கு சிறகுகள் அழகு!
வானத்துக்கு நிலவு அழகு!
மதுரைக்கு மல்லி பூ அழகு !!
தேனிக்கு தென்றல் அழகு!!!!
என் வாழ்க்கைக்கு நீ அழகு!