அமிதிஸ்ட் அதிர்ஷ்ட கல் அணிவதனால் ஏற்படும் பலன்கள்?

amethyst-stone-benefits
அமிதிஸ்ட் அதிர்ஷ்ட கல் அணிவதனால் ஏற்படும் பலன்கள்?

கனக புஷ்பராகத்தின் மாற்றுக் கல்லாகவும் குரு பகவானின் உப ரத்தினமாகவும் பயன்படுத்தலாம்.அமிதிஸ்ட் கற்கள் பிரபஞ்ச அதிர்வுகளையும்,கதிர்களையும் நரம்பு மூலமாக நம் உடலுக்கு அதிக சக்திகளையும், இறைவனின் தெய்விக அருளை ஆகர்ஷித்துத் தரும் வல்லமை உடைய இராசி மற்றும் அதிர்ஷ்ட கல்.

முக்கியமாக போதை பழக்கம் உள்ளவர்கள்,குடிபழக்கத்திற்கு எப்பொழுதும் அடிமையாக உள்ளவர்கள். குடியை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியாமல் இருப்பவர்கள்,அமிதிஸ்ட் கல் பதித்த மோதிரம் அணியும் போழுது குடித்தால் மதுவின் மீது வெறுப்பு வந்து கொஞ்சம் கொஞ்சமாக குடியை விட்டு திருந்தி மாறி விட முடியும்.

மது ,குடிப்பவர்களுக்கு கோபத்தினால் ஏற்படும் விளைவுகளாலும், குடும்பத்தில் வரும் குழப்பங்களாலும் மனம் எப்பொழுதும் போராட்டத்திலே இருக்கும். தன் தவறை உணர்ந்து குடிபழக்கத்தை விரைவில் விட்டு , இறை வலிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும் நிலை வரும்.ஆன்மிக ஆற்றலை அதிகரித்து தரும் ஆற்றல் உடைய அமிதிஷ்ட் கற்களை ஆங்கில குருமார்கள் அதிகமாக விரும்பி அணிந்தார்கள்.மேலும் நீண்ட நாட்களாக குடித்து வருபவர்களுக்கு மனதினில் பய உணர்வும், மன சோர்வும்,மிகவும் தைரியம் குன்றியவர்களாகவும் உடல் வலிமை குன்றியவர்களாக இருப்பார்கள். தம் உடலினுள் ஏற்படும் சோர்வுகளை நீக்கி,அமிதிஸ்ட் கற்கள் பதித்த மோதிரம் அணிந்து வருபவர்களுக்கு அதிக தைரியமும்,அதிக ஈடுபாட்டுடன் தொழிலில் கவனத்துடன் செயல்படுவார்கள். விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும்.அடிக்கடி மோட்டார் பயணம் செய்வோர்கள் பயணத்தின் போழுது அதிக பலன் அளிக்கும்.தீய அமானுஷ்ய சக்திகளில் இருந்தும்,மந்திர சக்திகளில் இருந்தும் தப்பித்து கொள்ளலாம்.

நிலையான புகழைப் பெற விரும்பும்3,12,21,30,ஆம்-எண் தேதியில் பிறந்த அன்பர்கள். இந்த கற்கள் பதித்த மோதிரம் அணியும் போழுது அவன் எதிர்பார்த்த புகழ் கிட்டுகிறது.தனுசு, மீனம் இராசிகாரர்கள் அணியலாம். புனர்புசம்-விசாகம்- பூரட்டாதி நட்ச்சத்திர காரர்கள் அணியலாம்.

அமிதிஸ்ட் கற்கள் மோதிரம் அணிவதால் தீரும் நோய்கள்:
1)உடலில் எவ்விதத் தோல்வியாதிகள் இருந்தாலும் அதனையும் நீக்குகிறது.
2)மாலைக் கண் எனப்படும் வியாதியை இது நிவர்த்தி செய்கிறது.

3)தூக்கமின்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் 3-ஆம் எண் சாதகன் இதனை அணிவதால் நிம்மதியான உறக்கம் நேரிடுகிறது.
4)கை கால்களில் உண்டாகும் மூட்டுவலியினை இது கண்டிக்கிறது.
5)கொடிய வயிற்றுவலியிலிருந்து 3ஆம் எண்காரருக்கு நிவாரணம் அளிக்கிறது.
6)உடலில் தோன்றும் வியாதிகளை, படை, அரிப்பு ஆகியவற்றை நீக்குகிறது.

7)பெண்கள் இதனை அணிவதால் வயிற்று வலி, மூட்டுவலி, மாதவிடாய் சம்மந்தப்பட்ட தொல்லைகளை நீக்குகிறது.
இந்த கல் எதிர்பாராத லாபங்களையும் பொருள் வரவையும் உண்டாக்குகின்றது.
கோபம், விரக்தி அகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். முன்கோபத்தையும் தடுக்கும்.

வியாபாரத்திலுள்ள காரிய தடைகள் யாவும் நீங்கும்.திருஷ்டியையும் போக்கும்.குடும்பத்தில் ஆன்மிக எண்ணங்களையும், ஐஷ்வர்யங்களையும் 

அமிதிஷ்ட் கல்லை அணிந்து பயன் அடையலாம். 3ம் என்ற எண்ணுக்குரிய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து வெற்றியை அடைவார்கள்.

தொடர்ந்து பொன்-பொருள் சேர்க்கையை உருவாக்க வல்லது .

திருமணத் தடை,குழந்தையின்மை ஆகிய பிரச்சனைகளுக்கும் அமிதிஸ்ட் கல் பதித்த மோதிரம் அணிந்து தீர்வுகள் காணலாம்.எல்லோருக்கும் அதிக நன்மை தரக்கூடிய கல் இதுவேயாகும்.