வெண்ணிலா - சிறுகதை

vennila-short-story
வெண்ணிலா - சிறுகதை

அவன் அந்த மருத்துவமனையில் உச்ச கட்ட வெப்பத்துடன் (101.8 *F )அனுமதிக்கப்படிருந்தான். தொடர் காயச்சல்.... உதிரப்பரிசோதனையில் வந்திருப்பது டெங்கு என்றும் உதிரத்தில் ப்ளேட்லெட் குறைந்து கொண்டிருப்பதும் தெரிய வந்தது.. உடனடியாக தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு அவன் மாற்றப்பட்டான்... ஊசி மருந்துகள் ஆண்டிபயாட்டிக்  என்று பாட்டில் பாட்டிலாக ஏறிக்கொண்டிருந்தது

அவன் அம்மாதினம் அழுதுகொண்டிருந்தாள் . அவள் கணவன் போய் சேர்ந்து பல வருடங்க ளாகின்றன. அவள் படாதபாடுபட்டு வீட்டுவேலைகள் செய்து இவனைப் படிக்கவைத்து அரசு வேலையும்கிடைத்து நிம்மதிப்பெருமூச்சு விட்டவேளையில்
அவனுக்கு இந்தக்காய்ச்சல் வந்தது வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாள்...மருத்துவமனை வாசலில் தவம் கிடந்தாள்... மருத்துவர்களின் ஆறுதலான பேச்சும் உடன் இருந்து கவனிக்கும் செவிலி யின்  ஆறுதல் வார்த்தைகளும் அவளை சமாதானப்படுத்தின

மூன்றாம் நாள் அவன் கண் திறந்தபோது அந்த   சிகிச்சைப்பிரிவின் செவிலி அவன் முன் நின்று கொண்டிருந்தாள்.... வெள்ளுடை தேவதையாக...

அவள் அவன் கைபிடித்துச்சொன்னாள் அபாயக்கட்டத்தை அவன் தாண்டிவிட்டதாக. விரைவில் குணமடந்து வீடு செல்வீர்கள் என்று நம்பிக்கை கொடுத்தாள்

அவன் அம்மா கொடுத்த கோவில் பிரசாதத்தை அவன் நெற்றியில் இட்டு நம்பிக்கையூட்டினாள்...
அவனருகே அமர்ந்து அவனுக்காகப் பிராத்தனை செய்தாள் அவனுக்கு நம்பிக்கை யூட்டினாள்.... கண்விழித்தவுடன் அவள் காலை வணக்கம் சொன்னாள்....

தினம் ஒரு ரோஜா  அவனுக்குக்கொடுத்து புன்னகைத்தாள்.....
அவனுக்கு மருத்துமனை பூந்தோட்டமானது. ரோஜாவைப்பெறும் விடியல்களுக்காகக் காத்திருந்தான்,,,,
அவளின் புன்னைகை மலர்களால் அவன் உதிரம் புத்துயிர் பெற்றது... அன்று அவளின் பிறந்தநாள் என்று சொல்லி அவனுக்கு கேக் கொடுத்தாள்.... பிறந்தநாள் பரிசு எதுவும் கிடையாதா என்று கிண்டலடித்தாள்....

தினம் எழுந்து குளித்து தன்னை அலங்கரித்துக்கொண்டான்... அவள் அவன் படுக்கை அருகே வரும் நேரங்களுகும் கரம் பிடித்து  நாடித்துடிப்பு  பார்க்கும் நேரங்களுக்கும் தவமிருந்தான்
மாதிரைகளை  கையில் கொடுத்து சாப்பிடச்சொன்னபோது... அவை மாத்திரைகளாகத்தோன்றவில்லை.... இந்திரன் தோட்டத்து முந்திரிகளாகத்தோன்றின...

அவளின் ஸ்பரிசங்களால் அவன் உடலின் இறந்த செல்களும் உயிர் பெற்றன...வியாதி நீடிக்கக்கூட வேண்டினான்... சரியானால் வெளியேற வேண்டுமே என்று மாத்திரைகள் தவிர்த்தான்.... ஆனால் கையும் களவுமாகப்பிடிபட்டு வாயில் போட்டுவிட்டாள்.. மெய் மறந்தான்

அந்த வேளையும் வந்தது. அவள் அழகிய ஒரு பூங்கொத்துடன் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்....
இதயம் படபடக்க உதிரம் ஜிவ்வென உச்சத்தில் பாய  நாடித்துடிப்பு எகிற முகமெல்லாம் மலர்ச்சியுடன் அவளை நோக்கினாள்
அவள் அவனருகே வந்து பூங்கொத்தைக் கொடுத்து வாழ்த்துகள்  என்றாள்  எதற்கு என்று ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் கேட்டபோது சொன்னாள் நீங்கள் குணமடைந்து விட்டீர்கள் அதற்கு வாழ்த்துகள் என்று சொல்லிவிட்டு வெளியே நின்ற அவன் அம்மாவை அழைத்து வந்து சொன்னாள் ... உங்கள் மகனை பத்திரமாக உங்களுக்குத்திருப்பிக்கொடுத்துவிட்டோம் அழைத்துச்செல்லுங்கள் என்றாள்

அம்மாவின் கண்களில் நீர் வழிந்தது...அவன் கண்களிலும் தான்
வீட்டுக்கு வந்ததும் அவள் நினைவே இதயம் எல்லாம் இருந்தது... விசாரித்ததில் அவள் இன்னும் மணமாகாதவள் என்று அறிந்து கொண்டான்...

அம்மவிடம் பேசினான் , அவளைப்பற்றி அவளைதிருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகச்சொன்னான்
அவளுக்கும் மிக்க மகிழ்ச்சி.... தானே சென்று பேசுவதாகச்சொல்லி பூவும் இனிப்புகளும் வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு அவளைப்பார்க்கச்சென்றாள்

இவன் வாசலில் திக் திக் என படபடக்கும் இதயத்துடன் காத்திருந்தான். சிறிது நேரம் கழித்து அவள் இவன் அம்மாவுடன் வெளியே வந்தாள்.... அம்மா முகம் வாடி இருந்தது...

அப்போது அவளை உள்ளே அழைத்தார்கள் அவள் உள்ளே சென்றதும் அம்மாவிடம் வினவினான்.... என்ன ஆயிற்று சென்றகாரியம் என்றான்
அவள் சொன்னாள் தான் அவளைப்பார்க்கச் சென்றபோது வேறு ஒரு இளைஞனுக்குப்பூன்கொத்து கொடுத்துக் கொண்டிருந்ததைப்பார்தேன் எனக்கு நம்பிக்கை யில்லை என்றாள்
சிறிது நேரத்தில் புன்னகையுடன் அவள் வந்தாள் இவனுக்கு மகிழ்ச்சி...

அருகே வந்து நலம் விசாரித்தாள். இவனுக்கு மனசு பறந்தது காற்றாய்...
சொல்லுங்கள் என்ன விசயம் அம்மாவும் மகனுமாக வந்திருக்கின்றீர்கள் என்றாள்
இருவரும் தயங்கினர். அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.... சகோதரா என்ன தயக்கம் .. என்றாள்
அவன் புரிந்துகொண்டான் சகோதரா என்ற ஒருவார்த்தையில்....

அவளும் புரிந்துகொண்டு சொன்னாள். அம்மா நாங்கள் செவிலிகள் இங்கே வரும் நோயாளிகளுக்கு மகளாக அன்னையாக சகோதரியாக இருந்து அவர்களுக்கு நம்பிக்கை யூட்டி அவர்களைக்குணப்படுத்தும்  உன்னதப்பணியில் இருப்பவர்கள்...
எங்களுக்கு அனைவருமே சகோதர்கள் பிள்ளை ,தந்தைபோன்றவர்கள் .
இதை சிலர் தவறாகப்புரிந்துகொண்டு காதல் வசப்படுவதுண்ண்டு... அவர்களுக்குப்புரியவைக்கிறோம்..... உண்மையை.....இது அடிக்கடிநடப்பதுதான்...

நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும் இதை.... என்றாள்
இப்போது அவள் முன்பைவிட அழகாகத்தெரிந்தாள்.....
தோல்வியுற்ற காதலைவிட வெண்ணிற தேவதையாகத்தெரிந்தாள் ... அவள்
அப்போது சொன்னான் அவன்
இருந்தாலும் நான் காத்திருக்கிறேன் ... உங்களுக்காக காலமெல்லாம்.....

எப்போழுதாவது  மனதில் தோன்றினால் சொல்லுங்கள் என்று சொல்லி கைகூப்பி விடைபெற்றான்.....
அப்போது எங்கோ ஒரு பண்பலையில் பாடல் ஒலித்தது..... கடவுள் உள்ளமே  ஓ கருணை இல்லமே  என்று
அவன் கண்களைத்துடைத்துக்கொண்டு நகர்ந்தான்.... அவன் அம்மாவும் கண்களைத்துடைத்துகொண்டாள்...
தற்செயலாக மருத்துவமனையில் உள்ளே பார்த்தபோது அவள் ஒரு வயதான நோயாளி அருகே  மருந்தை வாயில் புன்னகையுடன்  குடிக்கக்கொடுத்துகொண்டிருந்தாள்...

அங்கே ஒரு வெண்ணிலா விண் மீன்களுக்கு பணி செய்து கொண்டிருந்தது
பின் குறிப்பு ( இன்று தன் உயிரைப்பணயம் வைத்து  கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும்  ஆயிரம் ஆயிரமாயிரம் செவிலியர்களுக்கு அர்பணம்.