யானைக்கு 60 பெயர்களா?
யானைக்கு மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளன. இவை எல்லாமே தூய தமிழ்ப் பெயர்கள்.
#யானை (கரியது)
#வேழம் (வெள்ளை யானை)
#களிறு
#களபம்
#மாதங்கம்
#கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
#உம்பர்
#உம்பல் (உயர்ந்தது)
#அஞ்சனாவதி
#அரசுவா
#அல்லியன்
#அறுபடை
#ஆம்பல்
#ஆனை
#இபம்
#இரதி
#குஞ்சரம்
#இருள்
#தும்பு
#வல்விலங்கு
#தூங்கல்
#தோல்
#கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
#எறும்பி
#பெருமா (பெரிய விலங்கு)
#வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது)
#பூட்கை (துளையுள்ள கையை உடையது)
#ஒருத்தல்
#ஓங்கல் (மலை போன்றது)
#நாக
#பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
#கும்பி
#தும்பி
#நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
#குஞ்சரம் (திரண்டது)
#கரேணு
#உவா (திரண்டது)
#கரி (கரியது)
#கள்வன் (கரியது)
#கயம்
#சிந்துரம்
#வயமா
#புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
#தந்தி
#மதாவளம்
#தந்தாவளம்
#கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
#வழுவை (உருண்டு திரண்டது)
#மந்தமா
#மருண்மா
#மதகயம்
#போதகம்
#விரமலி
#மதோற்கடம் (மதகயத்தின் பெயர்)
#கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)
ஆகியவை ஆண் யானைகளின் பெயர்கள்.
#பிடி
#அதவை
#வடவை
#கரிணி
#அத்தினி ஆகியவை பெண் யானைகளின் பெயர்கள். இரண்டும் சேர்ந்து மொத்தம் 60 பெயர்கள்.
நன்றி: எம். அதுல்யா, வெங்கிட்ராஜ் மெட்ரிக் பள்ளி. சுல்தான்பேட்டை, சூலூர், கோவை)