சேலத்தில் உள்ள ஜீவசமாதிகள்!

salem-jeeva-samathigal
சேலத்தில் உள்ள ஜீவசமாதிகள்!

மாயம்மா ஜீவசமாதி

1920 முதல் கன்னியாகுமரி கடற்கரையில் நெடுநாட்கள் வாழ்ந்து வந்த அம்மையார் இவர்,9-2-1992-ல் சேலத்தில் ஜீவசமாதி அடைந்தார்,

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் லா காலேஜ் பேருந்து நிறுத்தம் அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,

சாந்தானந்த சுவாமிகள்

1921-ல் பிறந்தவர்,27-5-2002-ல் ஜீவசமாதி அடைந்தார்.

சேலத்திற்கு அருகில் உள்ள உடையார்பட்டி மலைக்குன்று பகுதியிலுள்ள ஸ்கந்தாஸ்ரமத்தில் இருக்கும் புவனேஸ்வரி அம்மன் திருவடி பீடத்திற்கு சற்று முன்பாக இவரது ஜீவசமாதி உள்ளது,

கஞ்சமலை சித்தர்

சேலத்திலிருந்து 21.கி,மீ,தூரத்திலுள்ள கஞ்சமலை அடிவாரத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

இவரது ஜீவசமாதி இருக்கும் கோயிலுக்கு அமாவாசைக் கோயில் என்று பெயர்,

அப்பா பைத்தியம்

கரூர் ஜமின் பரம்பரையில் 1859-ல் சித்திரை புனர்பூசம் நட்சத்திரத்தன்று பிறந்தார்.இவர் தன்னைப் பைத்தியம் என்று கூறிக் கொள்வார்.பக்தர்கள் இவரை அப்பா என்று அழைத்ததினால் இவருக்கு அப்பா பைத்தியம் என்ற பெயர் விளங்கிவிட்டது,இவர் ஜீவசமாதியானது 11-02-2000-ல் தை மாதம் ,அசுவினி நட்சத்திரத்தில்,சேலம் ரயில்வே ஜங்ஷனிலிருந்து அரை கி,மீ,தொலைவிலுள்ள திருவாக்கவுண்டனூரில் உள்ள தருக விலாஸ் என்னும் சத்குரு மாளிகையில் இவரது ஜீவசமாதி உள்ளது,

பாவை அம்மாள்

தியாகராசர் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகில் சேலத்தில் உள்ள ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

கரடிச் சித்தர்

சேலத்திலிருந்து 5.கி,மீ,தூரத்திலுள்ள உத்தம சோழபுரம் கரபுரீஸ்வரர் சிவன் கோயிலில் இவரது ஜீவசமாதி உள்ளது,

ஔவையார் வழிப்பட்ட கோயில் ,

சரபங்க முனிவர்

சேலம் - மேட்டூர் சாலையில் 16.கி,மீ,தொலைவில் உள்ள ஒமலூர் கோட்டையில் வசந்தீஸ்வரர் கோயிலில் உள்ள நவக்கிரக சந்நிதிக்கு அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,

நிர்வாண சுவாமிகள்
( வரதர் சுவாமிகள் )

சேலம் ஆத்தூரிலிருந்து 5.கி,மீ.தொலைவிலுள்ள தளவாய்பட்டிக்கு வந்து அங்கிருந்து வண்டிப்பாதையில் 3.கி,மீ,தொலைவு நடந்து சென்று அங்குள்ள சாமியார் மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

அப்பண்ண சுவாமிகள்

சேலம் ஆத்தூரிலிருந்து 15.கி,மீ,தூரத்தில் டவுன் பஸ் மூலம் சென்று வடக்கு மரை கிராமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

நடேச சுவாமிகள்
ஆத்தூர் (௮) சின்ன சேலம் வந்து அங்கிருந்து காரியானூர் வந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது,

ஸ்ரீ காகபுஜண்டர் ரிஷி
சேலம் ஆத்தூரில் இருந்து சின்ன சேலம் செல்லும் சாலையில் அம்மையகரம் என்ற ஊர் உள்ளது இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் தென்பொன்பரப்பி என்ற ஊரில் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் இவரது ஜீவசமாதி அமைந்துள்ளது.