ஏக்கத்துடன் முப்பது நாட்கள்!
வலியுடன்
ஐந்து
நாட்கள்...
கருவிழியில்
கன(ரு)வை
சுமந்து
உறங்காத
நாட்கள்
எத்தனை
எத்தனையோ?...
என்
தோட்டத்து
ரோஜாவிடம்
கேட்டதுண்டு...
எப்போது
என்
கருவாக
மலர்வாய்
என்று...
என்
செல்ல
மீன்களிடம்
கேட்டதுண்டு...
எப்போது
என்
வயிற்றில்
துள்ளுவாய்
என்று...
நிலவே
இல்லாத
இருளை
வெறித்து...
நித்தமும்
கண்களில்
நீரோடு...
எப்போது
என்னில்
உதிப்பாய்
என்று
வினவியதுண்டு...
அன்றொரு
நாள்...
யாரும்
அற்ற
தனிமையில்
மகிழ
மரத்தின்
அடியிலே...
மனச்சோர்வோடு
நான்
இருக்க...
தென்றல்
காற்று
இசையாக
வருட...
உலகிலேயே
மிகவும்
அழகான
மலர்
ஒன்று...
என்
வயிற்றில்
பட்டு
தெறித்தது...
கண்ட
நொடியிலேயே
அந்த
மலர்மீது
நம்பிக்கை
துளிர்த்தது...
பத்திரப்படுத்தினேன்...
என்னுடைய
பிறவா
மலரின்
வருகையை
எனக்கு
உணர்த்திய
மகிழ
மலரை...
தென்றல்
காற்று
மேலும்
இசைத்திட...
வானம்
என்னை
ஆசிர்வதிக்க...
என்னை
அணைத்தாள்...
என்
மழை
அன்னை...
மழை
தன்
அணைப்பை
விடுவிக்க...
வானம்
தெளிவடைய...
உதித்தாள்
என்
செல்ல
நிலா...
தன்
நட்சத்திர
கூட்டத்தோடு...
ஆம்...
அந்த
நிமிடம்...
அந்த
நொடி...
உணர்ந்தேன்...
என்னில்
உண்டான
மாற்றத்தை...
ஆம்
அவள்
வந்துவிட்டாள்...
ரோஜாவாய்
மலர்ந்து...
மீனாய்
துள்ளி...
நிலவாக
ஜொலித்து...
மகிழ்ச்சியில்
திளைக்க
வைக்க...
மகிழினி
வந்துவிட்டாள்...
இப்போது...
அதே
மகிழ
மரத்தின்
அடியில்...
மகிழினியின்
அன்னையாக
மகிழ்ச்சியுடன்
நான்...