படுக்கையில் இருந்து கண் விழித்ததும் பார்க்க கூடியவை...
🌟 வலது உள்ளங்கை
🌟 சூரியன்
🌟 விளக்கு
🌟 தாமரை
🌟 பொன்
🌟 சந்தனம்
🌟 சிவலிங்கம்
🌟 கடல்
🌟 கன்றை ஈன்ற பசு
🌟 மிருதங்கம்
🌟 கண்ணாடி
🌟 காட்டு யானை
🌟 கருங்குரங்கு
🌟 இறை நூல்கள்
🌟 தனது வலது தோள் பட்டை
🌟 கற்புடைய பெண்கள்
🌟 கோபுரம்
🌟 பெற்றோர்
🌟 தெய்வத்தின் உரு
🌟 துளசி மாடம்
படுக்கையில் இருந்து கண் விழித்ததும் பார்க்க கூடாதவை:
🌟 தலை விரித்தவர்
🌟 அழுக்கு மேனியர்
🌟 அசுத்த ஆடை உடுத்தியோர்
🌟 நோயாளிகள்
🌟 விளக்குமாறு
🌟 உலக்கை
🌟 சாம்பல்
🌟 கழுதை
🌟 எருமை
பெண்கள் செய்ய கூடாதென விலக்கப்பட்ட சில நடைமுறை சம்பிரதாயங்கள்:
🌟 தலையை விரித்துப் போட்டபடி இருக்க கூடாது.
🌟 பூசனிக்காய் திருஸ்டி சுற்றி உடைக்க கூடாது.
🌟 கர்ப்பமுள்ள பெண்கள் தேங்காயை சிதறுகாயாக உடைக்க கூடாது.
🌟 கணவனுக்கு தெரியாமல் தர்மம் செய்ய கூடாது.
🌟 இரவில் வீட்டை பெருக்க கூடாது. அவ்வாறு பெருக்கினால் வீதியில் குப்பை கொட்ட கூடாது.
🌟 திருமணமான பெண்கள் காலில் மெட்டி இல்லாமல் இருக்க கூடாது.
🌟 மார்பு தரையில் படும்படியாக நித்திரை செய்ய கூடாது.
🌟 பொதுவாக தீட்டு உள்ளவர்கள் கோயிலினுள் பிரவேசிக்க கூடாது.
🌟 பெண்கள் அதிகம் கண்ணீர் விடும் வீட்டில் செல்வம் தங்காது என்பது ஐதீகம்.
இரவில் தூங்கும் போது:
🌟 தெற்கு பக்கம் தலை வைத்து உறங்குதல் நன்று.
🌟 மேற்கு பக்கம் தலை வைத்து உறங்கவே வேண்டாம்.
🌟 வடக்கு பக்கம் தலை வைத்து படுப்பது தவறு.
🌟 கிழக்கு பக்கம் தலை வைத்து படுத்தல் உத்தமம்.
புதிதாக வீடு குடிபுகும் போது கோயிலில் இருந்து பின்வரும் பொருட்களை வீட்டுக்கு எடுத்து செல்வது சம்பிரதாயமான ஒன்றாகும்.
🌟 குத்துவிளக்கு - 2
🌟 நிறைகுடம்
🌟 படங்கள் - பிள்ளையார் , லக்ஸ்மி, முருகன் (கட்டாயமா படங்கள்)
🌟 முகம் பார்க்கும் கண்ணாடி
🌟 பூமாலையுடன் கூடிய அர்ச்சனை தட்டம்
🌟 படங்களிற்குரிய பட்டுக்கள்.
🌟 நிறைநாழி
🌟 கற்கண்டு
🌟 நெல்பரவி பட்டுத்துணி, நாணயம் மற்றும் மஞ்சள் என்பன வைக்கப்பட்ட தட்டு
🌟 செத்தல் தேங்காய் தோலுடன் - 3
🌟 மஞ்சள் பூசிய தேங்காய்
🌟 ஒரு சிறிய தென்னம் பிள்ளை
🌟 ஒரு புது மண் சட்டி உப்பு நிநைத்தபடி
🌟 புது சட்டியில் முழு மஞ்சள்
🌟 கோயிலில் ஆசீர்வாதம் பெற்று எடுத்துவர விபூதி சந்னம் முதலிய பொருட்கள்
இந்த பதிவானது அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் என்ற நூலில் இருந்து தொகுக்கப்பட்டது.
நன்றி அண்ணாச்சி