மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும். எதிர்காலம் பற்றிய கனவில் ஒன்று நிறைவேறும். பால்ய நண்பர்களின் உதவி அவ்வப்போது கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, சாதுர்யமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். மனக் கவலை அகலும். பொருளாதார ரீதியாக சில சிக்கல்கள் வரக்கூடும்.யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, முக்கிய வேலைகளை தாமதமின்றி முடிக்க முடியும். வீட்டை பராமரிக்க வேண்டிவரும். பண வரவு நன்றாக இருக்கும்.கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் லாபம் வரும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தின் மீது அதிக பற்று உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும்.தேவையின்றி கடன் வாங்குவதை தவிற்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் பண வரவு நன்றாக இருக்கும்.அடிப்படை வசதிகள் பெருகும். பயணங்கள் தள்ளி போகும். உறவினர்களுடன் விவாதங்கள் வந்துப் போகும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்குக்கும். உத்யோகத்தில் நிதானம் அவசியம்.தொழில் வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்கள் தெரிய வரும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்கள் கேட்டதை செய்து தர முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.புதிய முதலீடுகளால் வியாபார வளர்ச்சி பெருகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்ர்களே, பேச்சில் மென்மையும், மேன்மையும் அதிகரிக்கும்.புத்தி சாதுர்யத்தால் சாதித்து காட்டுவீர்கள் .உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம்.யாருக்கும் வாக்குறுதிகளை வழங்கவும் வேண்டாம் .தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். சேமிப்பு கணிசமான முறையில் உயரும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, பொறுப்பான செயல்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். வீண் செலவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் மிகவும் அவசியமாகும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.நண்பர்களின் உதவி கிடைக்கும்.புதிய நபர்களின் நட்பு மகிழ்ச்சியை தரும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே,நினைத்த காரியம் கைகூடும்.மனநிறைவு உண்டாகும். எதிர்பார்ப்புகள் நாளடைவில் நிறைவேறும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.