மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,மனதில் சந்தோஷம் பிறக்கும்
பண தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் சிலர் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும் புது நண்பர்களிடம் சுமூக உறவு ஏற்படும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, புதிய முயற்சிகள் தள்ளி போகும். வீடு மாற்ற வேண்டிய சூழல் உருவாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே,மனம் அமைதி பெறும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் அசதி, சோர்வு நீங்கும். கடன் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப விவகாரங்களில் கவனமாக செயல்படவும். உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். உறவினர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும். குடும்ப சிக்கலை தீர்க்க முடியும். கணவன் மனைவி உறவு பலப்படும்.அடிக்கடி பயணங்களால் செலவினங்கள் அதிகரிக்கும். பெண்களால் சில தொல்லைகள் வரும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். பிரியமானவர்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. கடன் தொந்தரவு இருக்கும். நண்ர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள்.உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.புது தொழில் யோகம் அமையும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் உண்டாகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த உதவி தாமதமாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்.பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். பெற்றோர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். இடம், பொருள், ஏவல், அறிந்து செயல்படவும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்
மகரம்
மகர ராசி நண்பர்களே, முக்கிய வேலைகளை தாமதமின்றி முடிக்க முடியும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, வேண்டியவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மீனம்
மீன ராசி நண்பர்களே, எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.பண தேவைகள் பூர்த்தியாகும். பிரபல நபர்களின் சந்திப்பு நிகழும். எதிர்த்து நின்றவர்கள் கூட விலகியே நிற்பர். தொழில், வியாபாரம் செழிப்படையும் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.