மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். நிதி நிலைமை சீரடையும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாரத்தில் உள்ள சூட்சுமங்கள் புரிய வரும். வியாபார யுக்தியால் பன் மடங்கு லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தெய்வ பலம் கூடும்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். தேக நலனில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கவனம் தேவை.தொழில் போட்டிகள் குறையும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, விரும்பிய காரித்தை விரும்பியபடியே செய்ய முடியும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வரவுக்கேற்ற சிலவுகள் உண்டு வாகனத்தில் மெதுவாக செல்லவும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற பேச்சுக்களால் சண்டைகள் உருவாகும்.உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் திருப்திகரமான சூழல் நிலவும். வீண் செலவுகளை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில் வியாபரங்கள் மிதமான வருமானத்தை தரும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிரிந்து சென்ற தம்பதியினர் ஒன்று சேருவர்.புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உதிக்கும். தொழில், வியாபாரம் விருத்தி பெறும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, மனம் குதுகுலம் அடையும் சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும். குடும்பத்தில் சுக வாழ்வு ஏற்படும். வேண்டியவர்கள் விரும்பி கேட்டதை வாங்கி தர இயலும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது வாய்ப்புகள் வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பகைவர்கள் பணிந்து போவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் சீரான பாதையில் செல்லும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே,மனக்குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். குடும்பத்தில் ஆதரவு பெருகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமும் கவனமும் தேவை.
மகரம்
மகர ராசி நண்பர்களே, திட்டமிட்ட காரியம் ஒன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும்.பண விவகாரங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.புது தொழில் யோகம் அமையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும்.கொடுத்த கடன் வசூல் ஆகும். உத்யோகத்தில் கவனம் தேவை.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் தவிற்க்கவும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே,சுறுசுறுப்பும் உற்சாகமும் உண்டாகும். சாதுர்யமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். மனக் கவலை அகலும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.