மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் தேவையற்ற பேச்சுக்களால் சண்டைகள் உருவாகும் குடும்ப வேலைகளை முடிப்பதில் சிரமம் இருக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும் சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே,புதிய வாகன யோகம் உண்டு எதிர்பாராத பணம் கைக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதியவர்கள் நட்பு ஆதாயத்தை தரும். பிரியமானவர்கள் வழியில் மனஸ்தாபம் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, மனதில் சந்தோஷம் நிலவும். தடைபட்ட காரியம் தடையின்றி அமையும்
குடும்ப வாழ்க்கையில் இருந்த இடையூறுகள் நீங்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.இன்று முதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது கவனம் .
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே,கணவன் மனைவி உறவு பலப்படும்.. பிரச்சனையை எதிர்கொள்ளும் துணிச்சல் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உணவு கட்டுப்பாடு அவசியம். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். எதிலும் பொறுமையாக இருந்தால் காரியம் சாதிக்கலாம். வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரம் மந்தநிலை காணப்படும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே,சகோதர வழியில் நன்மை உண்டாகும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். பெற்றோர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். பண வரவில் தாமதமதம் இருக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். குல தெய்வ பிராத்தனைகள் நிறைவேறும்.புதிய வாகன யோகம் உண்டாகும். பொருள் சேர்க்கைக்கு இடமுண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, கொடுக்கல், வாங்கலில் சில குழப்பங்கள் வரும். எதிரிகளின் பலம் பாதியாக குறையும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டு.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடி வரும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
தொழில் வியாபாரம் சீராக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் அகலும் .தெய்வீக எண்ணம் மேலோங்கும். திட்டமிட்ட சில காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய நபர்களின் சந்திப்பு நிகழும்.தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும்.பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் கைகூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.